Asianet News TamilAsianet News Tamil

பா.ஜ.க.வை வீழ்த்த பக்கா ஸ்கெட்ச் போட்ட பகுஜன் சமாஜ்... மானாவாரி பிளானில் மாயாவதி!

Bakha sketch bhajan Samaj to bring down BJP Mayawati is a rainbow planner
Bakha sketch bhajan Samaj to bring down BJP  Mayawati is a rainbow planner
Author
First Published May 8, 2018, 11:01 AM IST


2019 மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி ! மாயாவதி அறிவிப்பு!    லக்னோ: அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை வீழ்த்துவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் தீவிர இந்து மதக் கோட்பாடுகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க.வை வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றினைந்து எதிர்க்க வேண்டும்.

Bakha sketch bhajan Samaj to bring down BJP  Mayawati is a rainbow planner

உ.பி.யில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற இரு கோரக்பூர், போல்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பகுஜன் கட்சி ஆதரவளித்ததால் சமாஜ்வாடி அமோக வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது நடக்க உள்ள கைரானா மக்களவை மற்றும் நூர்பூர் சட்டசபை இடைத்தேர்தலிலும் ஆதரவு தொடரும். எனவே உ.பி.யில் வாக்குகள் சிதறாமல் இருக்க மக்களவை பொதுத்தேர்தலிலும்  சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி உறுதி.

Bakha sketch bhajan Samaj to bring down BJP  Mayawati is a rainbow planner

தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு எட்டியவுடன் கூட்டணி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என மாயாவதி தெரிவித்தார். கடந்த 2014 பொதுத்தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் கட்சிகள் தனியாக போட்டியிட்டதால் பா.ஜ.க. மொத்தமுள்ள 80 இடங்களில் 73 இடங்களை அள்ளியது. இம்முறை மாயாவதியின் அறிவிப்பால் பா.ஜ.க. கடும் சரிவை சந்திக்கும் என்றே தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios