கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், கடந்த வாரம் அங்குள்ள கிணறு ஒன்று பூமிக்கும் மூழ்கியது 

70 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொதுக்கிணறு ஒன்று பூமிக்கு அடியில் அதிக நீரோட்டம் காரணமாக பூமிக்குள் புதைந்தது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த சில வாரங்களாகவே தொடர் கனமழை காணப்பட்டது.

வயநாட்டில், மனந்தவாடி என்ற இடத்தில் உள்ள 70 ஆண்டு பழமை வாய்ந்த கிணறு பூமிக்கு அடியில் புதைந்து.இந்த வீடியோவை பார்த்த மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கிணறு பூமிக்குள் புதைந்தது போன்றே, வீடும் புதைந்து விடுமோ என்ற அச்சத்தில் இருகின்றனர். இதற்கு முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டிலும் கேரளாவில் ஒரு கிணறு பூமிக்குள் புதைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.