மாத்திரை வாங்கும்போது இதை கவனிச்சீங்களா? நடுநடுவே இடைவெளி இருப்பதற்குக் என்ன காரணம் தெரியுமா?
மாத்திரையை வாங்கும் இரண்டு விஷயங்களைக் கவனிக்கலாம். ஒவ்வொரு மாத்திரைக்கும் இடையில் இடைவெளி இருக்கும். சில நேரங்களில் மாத்திரை இல்லாம வெற்று குமிழ்களும் இடையில் இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் மருந்து தேவைப்படுகிறது. தலைவலி போன்றவற்றுக்கு மாத்திரைகளை பயன்படுத்துவதில்லை என்றாலும், சில கடுமையான நோய்கள் வரும்போது மாத்திரைகளை உட்கொள்வது தேவைப்படுகிறது.
மாத்திரையை வாங்கும் இரண்டு விஷயங்களைக் கவனிக்கலாம். ஒவ்வொரு மாத்திரைக்கும் இடையில் இடைவெளி இருக்கும். சில நேரங்களில் மாத்திரை இல்லாம வெற்று குமிழ்களும் இடையில் இருக்கும். அந்த வெற்று குமிழ்கள், தவறுதலாக மாத்திரையை வைக்காமல் விட்டுவிட்டதால் வந்தவை அல்ல. மாத்திரைகளுக்கு இடையில் சில காலி குமிழ்கள் இருப்பதற்கு குறிப்பிட்ட காரணம் உள்ளது.
மாத்திரைகளின் பாதுகாப்புக்காக:
மருந்துகள் பொதுவாக பெரிய அளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனால்தான் அவை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து உலகம் முழுவதும் கொண்டுசெல்லப்படுகின்றன. மருந்துகளின் இந்த இறக்குமதி-ஏற்றுமதி பரபரப்பானது.
உயர் அழுத்தத்தில் இருந்து மருந்தைப் பாதுகாக்கவும், தேய்மானம் ஏற்படாமல் இருக்கவும், வெற்று குமிழ்கள் பயன்படுத்தப்படும். இந்த மாத்திரைகளைக் கடினமாகக் கையாளும்போது, அல்லது அதிகம் அழுத்தம் கொடுக்கும்போது அந்த அழுத்தம் வெற்று குமிழ்கள் மீதுதான் விழும்.
மாத்திரைகள் இடையே இடைவெளி எதற்கு?
ஒரு அட்டையில் உள்ள அனைத்து மாத்திரைகளையும் வாங்காமல், குறைவாகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் மாத்திரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான மாத்திரைகளை வெட்டிக் கொடுப்பதற்கு இடைவெளி இருப்பது வசதியாக இருக்கும்.
இடைவெளி விடுவது மருந்து ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்கவும் உதவுகிறது. காலாவதி தேதிகள், ரசாயனக் கலப்பு, பக்க விளைவுகள் போன்ற மருந்து பற்றிய பல கூடுதல் தகவலை அச்சிடவும் இடைவெளி விடப்படுகிறது.
நெருப்புடா... நெருங்குடா பாப்போம்! பயிற்சி முடிந்து ராணுவப் படைகளில் இணையும் 19,000 அக்னி வீரர்கள்!