Asianet News TamilAsianet News Tamil

White Tea: ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அள்ளித் தரும் வெள்ளைத் தேநீர்!

தேயிலை செடியில் உள்ள மொட்டுகள் மற்றும் இலைகள் முழுவதுமாக விரிவதற்கு முன்னரே பறிக்கப்பட்டு ஒயிட் டீ  தயாரிக்கப்படுகிறது. இந்த மொட்டுகளின் மீது சிறிய அளவிலான வெள்ளை முடிகள் இருப்பதனால், இது வெள்ளை டீ என்னும் பெயரைப் பெற்றுள்ளது.

White tea has many health benefits!
Author
First Published Dec 9, 2022, 2:13 PM IST

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது ஒயிட் டீ. உடல் எடையை விரைவாக குறைக்க முயற்சி செய்யும் நபர்களுக்கு, இந்த டீ மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூறலாம். தேயிலையில் இருந்து பெறக்கூடியவை தான் வெள்ளை தேநீர். இது மிகவும் குறைவான அளவில் பதப்படுத்தப்பட்ட டீ வகையைச் சேர்ந்தது. தேயிலை செடியில் உள்ள மொட்டுகள் மற்றும் இலைகள் முழுவதுமாக விரிவதற்கு முன்னரே பறிக்கப்பட்டு ஒயிட் டீ  தயாரிக்கப்படுகிறது. இந்த மொட்டுகளின் மீது சிறிய அளவிலான வெள்ளை முடிகள் இருப்பதனால், இது வெள்ளை டீ என்னும் பெயரைப் பெற்றுள்ளது.

வெள்ளைத் தேநீர் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வெள்ளைத் தேநீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இதில் பைட்டோநியூட்ரியன்கள், பாலிபினால்கள் மற்றும் பலவித கேட்டசின்கள் உள்ளது. மேலும் இதில் ஃப்ளோரைடு, டானின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை இதில் அதிகமாக காணப்படுகிறது. ஆகையால், இந்த டீ குடித்தால் பல நோய்களில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும். க்ரீன் டீயை விடவும், வெள்ளை டீயில் 20-30% வரை உயர் ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை உள்ளது. அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை புதுப்பிக்க உதவுகிறது. இதன் காரணமாக நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு நல்ல தீர்வாக அமையும் என்பதோடு முக்கியமாக முதுமையைப் போக்க வல்லது.

ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம் ஆட்டு இரத்த பொரியல்! சுவையாக செய்வது எப்படி?பார்க்கலாம் வாங்க!

வெள்ளைத் தேநீரின் நன்மைகள்

  • வெள்ளைத் தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உடலை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கிறது.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக க்ரீன் டீ  குடிக்க வேண்டும். ஆனால், ஒருமுறை ஒயிட் டீயை முயற்சி செய்யுங்கள். பிறகு அதிக பசி எடுக்காமல், எடை இழக்கத் தொடங்கும்.
  • சிலருக்கு முகத்தில் தோல் தொங்கத் தொடங்கும். இவர்கள், அடிக்கடி ஒயிட் டீ குடித்து வந்தால், முகம் இளமையாக மாறும். முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை மறையச் செய்கின்ற வெள்ளை டீயில், முதுமை எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.
  • தினந்தோறும் காலையில் ஒயிட் டீ குடித்து வந்தால், அன்றைய நாள் முழுவதும் உடலில் ஆற்றல் நிறைந்து காணப்படும். ஒயிட் டீ குடிப்பதன் காரணமாக புத்துணர்ச்சி அடைவதோடு, சோர்வும் நீங்குகிறது.
  • ஒயிட் டீ குடிப்பதன் பலனாக, இனிப்பு வகைகளை சாப்பிடும் நாட்டம் குறைந்து விடும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகும். செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக ஒயிட் டீயை குடித்தால், மலச்சிக்கல் மற்றும் வாய்வுத்தொல்லை நீங்கும்.
  • ஞாபக சக்தியை அதிகரிக்கும் பாலிபினால்கள், வெள்ளைத் தேநீரில் அதிகம் காணப்படுகிறது. இதுதவிர ஒயிட் டீ குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது தொற்றுநோயையும் தடுக்கிறது.
  • இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பால் அவதிப்படும் நபர்கள் கட்டாயம் ஒயிட் டீ குடிக்க வேண்டும். இது செரிமான அமைப்பு மற்றும் இதயத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும். கெட்ட கொழுப்பை குறைப்பதோடு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.
Follow Us:
Download App:
  • android
  • ios