Anxiety: இன்றைய உலககில் நாம் அடிக்கடி டென்ஷன் ஆகிறோம். சில பழக்க வழக்கங்கள் இதற்கு முதன்மையான காரணமாக அமைகின்றன. இதற்கு என்ன தீர்வு? என விரிவாக பார்ப்போம்.

இப்போதைய காலகட்டத்தில் மன அழுத்தமும், பதட்டமும் (Anxiety) நம்மில் பலருக்கும் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால், இந்த பதட்டத்தை நாமே அறியாமல் நமது சில தினசரி பழக்கவழக்கங்கள் இன்னும் அதிகமாக்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி நமது பதட்டத்தை அதிகரிக்கும் மூன்று முக்கிய பழக்கங்கள் என்னவென்று பார்ப்போம்.

சூழல்களைத் தவிர்ப்பது

நமக்கு ஒரு விஷயம் சங்கடத்தையோ அல்லது அசௌகரியத்தையோ கொடுத்தால், நாம் அதைத் தவிர்க்கவே முயற்சிப்போம். இது தற்காலிகமாக நமக்கு நிம்மதியைத் தந்தாலும், நமது மூளைக்கு ஒரு தவறான சிக்னலை அனுப்புகிறது. இதன் விளைவாக, அடுத்த முறை அதே போன்ற ஒரு சூழல் வரும்போது, நமது பயம் இன்னும் இருமடங்காக அதிகரிக்கும்.

கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பது

டென்ஷனாக இருக்கும்போது மணிக்கணக்கில் சோஷியல் மீடியாவில் மூழ்குவது, அதிகமாகச் சாப்பிடுவது, அல்லது தேவையில்லாமல் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது போன்ற பழக்கங்கள் உங்களிடம் உள்ளதா? இந்தச் செயல்கள் சிறிது நேரத்திற்கு உங்கள் பதட்டத்திலிருந்து உங்களை விடுவித்தாலும், உங்கள் பிரச்சினையின் மூல காரணத்தை இது ஒருபோதும் தீர்க்காது.

இதையும் படிங்க: Self-Perception: நம்மளையே நாம் தப்பா புரிஞ்சுக்கிற 5 இடங்கள்.. சைக்காலஜி சொல்வதை கேளுங்க!

திரும்பத் திரும்ப மற்றவர்களிடம் உறுதி தேடுவது

பதட்டமாக உணரும்போது, "நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?" அல்லது "என் மேல கோபமா இருக்கியா?" என்று மற்றவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்பது இன்னொரு பழக்கம். அதேபோல, உடலில் ஏதாவது ஒரு சிறிய அறிகுறி தெரிந்தால் கூட, உடனே கூகுளில் தேடிப் பார்ப்பதும் இந்தப் பழக்கத்தில் அடங்கும். இது தற்காலிகமாக மன அமைதியைத் தந்தாலும், காலப்போக்கில் உங்கள் முடிவுகள் மீதான நம்பிக்கையைக் குறைத்து, மனதிற்குள் சந்தேகத்தை மேலும் அதிகமாக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

உங்களிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவற்றைத் தவிர்த்து ஓடாமல், மனரீதியாக அவற்றை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். இதுவே பதட்டத்தைக் கையாள்வதற்கான முதல் படி. சுருக்கமாகச் சொன்னால், சங்கடமான சூழல்களைத் தவிர்ப்பது, கவனத்தை திசை திருப்புவது, மற்றவர்களிடம் ஆறுதல் தேடுவது போன்ற பழக்கங்கள் தற்காலிகமாக நிம்மதி தந்தாலும், நீண்ட காலத்திற்கு நமது பயத்தையும், பதட்டத்தையும், தன்னம்பிக்கையின்மையையும் அதிகரிக்கவே செய்யும்.

இதையும் படிங்க:Parenting Tips: அப்பாக்களே கவனம்! மகன் தப்பு செய்தால் இந்த 5 விஷயங்களை சொல்லவே சொல்லாதீங்க

சுவாசப் பயிற்சி

பதற்றம் அதிகரிக்கும் போது 4 நொடிகள் மூச்சை உள்ளிழுத்து, 7 நொடிகள் அடக்கி, 8 நொடிகள் வாய வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும். இது நரம்பு மண்டலத்தை உடனே அமைதிப்படுத்தும்.

தரை தொடும் பயிற்சி

உங்களைச் சுற்றி நீங்கள் பார்க்கக்கூடிய 5 விஷயங்கள், தொடக்கூடிய 4 விஷயங்கள், கேட்கக்கூடிய 3 ஒலிகள், நுகரக்கூடிய 2 வாசனை, சுவைக்கக்கூடிய 1 விஷயம் என்பதில் கவனத்தைச் செலுத்துங்கள். இது கவனத்தை பயத்திலிருந்து நிகழ்காலத்திற்கு கொண்டு வரும்.