- Home
- உடல்நலம்
- Ayurveda for Anxiety : அடிக்கடி பதட்டம் வருதா? ஆயுர்வேதம் சொல்லுற இதை ஃபாலோ பண்ணா பதட்டமே வராது!
Ayurveda for Anxiety : அடிக்கடி பதட்டம் வருதா? ஆயுர்வேதம் சொல்லுற இதை ஃபாலோ பண்ணா பதட்டமே வராது!
பதட்டத்தை குறைக்க ஆயுரவேதம் செல்லும் சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Ayurveda for Anxiety
உடலில் வாதம் அதிகமானால் தான் பதட்டம், கவலை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் சொல்லுகின்றது. சில குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக வாத தோஷம் அதிகரிக்கும். உதாரணமாக நீண்ட நேரம் இரவு முழுத்திருப்பது, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, அதிக வேலைப்பளு, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுதல் போன்றவையாகும். ஒரு மனிதன் அடிக்கடி பதட்டமடைந்தால், அவனது உடல் ஆரோக்கியத்தில் பாதிக்கப்படும். ஆனால், பதட்டத்தை குறைக்க ஆயுர்வேதத்தில் சில வழிகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை மட்டும் பின்பற்றினால் போதும். பதட்டம் இனி வராது. அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.
சூடான நீர் குளியல் ;
சூடான நீர் குளியல் உடல் தசைகளை தளர்த்தும் மற்றும் மனதையும் தளர்த்தும். குறிப்பாக பதட்டத்தை போக்கவும் உதவும். 10-15 நிமிடங்கள் குளித்தாலே நல்ல பலன்கள் கிடைக்கும்.
பாதாம் பால் :
இரவு 10 பாதாமை ஊற வைத்து மறுநாள் காலை பாதாமில் தோலை நீக்கி ஒரு கப் பாலில் அதை சேர்க்கவும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காய், குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பாலை தினமும் கொடுத்து வந்தால் பதட்டம் வராது.
மென்மையான உணவுகள் :
பதட்டத்தை குறைக்க பழங்கள், இஞ்சி, பட்டை, ஜாதிக்காய், கல்லு உப்பு, பெருங்காயம், சர்க்கரை, சோம்பு, சூப், தானியங்கள், பாஸ்தா போன்றவற்றை சாப்பிடலாம். மேலும் எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காஃபின், மதுபானம், சாக்லேட் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தெரபி :
வாதத்தால் உண்டான பதட்டத்தை போக்க ஆரஞ்சு, பேசில் இலைகள், இலவங்கம், லாவண்டர் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவது நல்ல பலன்கள் கிடைக்கும். குளிக்கும் நீரில் சில துளிகள் லாவண்டர் எண்ணெயை கலந்து குளித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மூச்சுப்பயிற்சி :
மூச்சு பயிற்சி செய்தால் நரம்பு மண்டலம் இதமாக இருக்கும். பதட்டம் நீங்கி மன அமைதி அடையும். எனவே இதுவரை நீங்கள் மூச்சு பயிற்சி செய்யவில்லை என்றால் இனியாவது செய்யுங்கள்.

