Anxiety and Sex: கவலைப்பட்டா செக்ஸ் வாழ்க்கை பாதிக்குமா? எப்படி அதை சரி செய்யலாம்?
சந்தோஷமான மனநிலை தான் மகிழ்ச்சியான பாலியல் வாழ்க்கைக்கு உதவும். கவலைப்படுவதால் (Anxiety) தாம்பத்தியத்தில் ஏற்படும் பாதிப்புகளை எப்படி சரி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது மகிழ்ச்சி எப்படி நிரந்தரம் கிடையாது. அதேபோல கவலையும் நிரந்தரம் கிடையாது. ஆனால் தொடர்ந்து கவலையாக இருப்பதால் நம் வாழ்வில் பல எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். அந்த வகையில் அதிகமாக கவலை (Anxiety) கொள்வோருடைய பாலியல் வாழ்க்கையின் பாதிப்பு ஏற்படுகிறது. கவலை கொள்வது நம்முடைய மனம் மட்டும் இல்லாது உடலையும் சேர்த்து பாதிக்கிறது. பயம், பதற்றம், அமைதியின்மை ஆகிய உணர்வுகள் அதிகமாக தூண்டப்படுவதால் இரவில் ஆழ்ந்த தூக்கம் இருக்காது.
கவலையாக (Anxiety) இருப்போரிடம் காணப்படும் பாதிப்புகள்: வேகமான இதயத்துடிப்பு, மூச்சுத்திணறல், மயக்கம், சொல்ல முடியாத வலியும் வேதனையும், வியர்வை, மன அழுத்தம் ஆகியவை ஒருவரின் கவலையைப் பொறுத்து மாறுபடும். பாலியல் செயல்பாட்டிலும் கவலை உண்டாகலாம். இது போன்ற அறிகுறிகள் காணப்படும் நபர்கள் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடும்போது முழுமையாக உணராமல் இருக்கலாம் அல்லது உடலுறவில் ஈடுபடுவதையே தவிர்க்கலாம். சிலர் உடலுறவு கொள்ள பயப்படலாம். இங்கு அதிலிருந்து எப்படி மீள்வது என காணலாம்.
ஒருவர் கவலையாக இருக்கும்போது பாலியல் விருப்பம், ஆசை, தூண்டுதல், புணர்ச்சி செயல்பாடு ஆகியவற்றை பாதிக்க வாய்ப்பு உள்ளது. கவலையாக நீங்கள் காணப்படும் போது பாலியல் வாழ்க்கையில் இருக்கும் ஈடுபாட்டை குறைக்கலாம். அதிகமான கவலை உணர்வு உங்கள் எண்ணங்களை ஆக்கிரமிக்கும் போது உடலுறவில் ஈடுபடும் மனநிலையில் இருந்து உங்களை தடுத்து விடலாம். சிலர் கவலையை குறைக்க மருந்து எடுத்துக் கொள்வார்கள் இந்த மருந்துகள் உங்களுடைய பாலுணர்வை (libido) குறைக்கும் வாய்ப்புள்ளது.
பதட்டத்துக்கு சிகிச்சை அளிக்க ஆண்டி டிரஸண்ட்கள் எடுத்து கொள்வார்கள். இதனுடைய முக்கியமான பக்கவிளைவுகளில் ஒன்று பாலியல் ஆசை குறைவது தான். உடலுறவு கொள்ள முடியாமல் போய்விடும். பாலியல் கவலை உடையவர்கள் தங்களுடைய உடல்கள் மீது தங்கள் துணை எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்த சுய உணர்வை கொண்டிருப்பார்கள். இப்படி உங்கள் தோற்றம் மீதும் உங்களுடைய துணையின் தோற்றம் மீதும் அதிக கவனம் கொண்டிருந்தால் பாலியல் செயல்பாடுகளில் இருந்து உங்களுடைய கவனம் திசை திரும்பிவிடும். இது உறவு கொள்ளும் போது உங்களை உற்சாகம் இழக்கச் செய்யலாம்.
உங்கள் துணையுடன் நெருங்கி பழகவிடாமல் தடுப்பது கவலையாக கூட இருக்கலாம். உன்னுடைய கடந்த கால அதிர்ச்சி உங்கள் துணையுடன் உங்களை நெருங்க விடாமல் தடுக்கலாம். பதட்டம் கொண்ட நபர்களுக்கு உடலுறவு, வாழ்க்கை துணை குறித்து பயம் இருக்கலாம். இதனால் துணையுடன் நெருக்கமாக பழகுவதை தவிர்ப்பார்கள். உங்களுடைய கடந்த கால உறவில் அதிகம் காயம்பட்டிருந்தாலும் அல்லது உங்கள் துணை உங்கள் மீது அதிகமாக ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும் நீங்கள் நிச்சயம் மனநல மருத்துவரிடம் இதுகுறித்து ஆலோசியுங்கள். கவலையை சமாளிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெளிப்படையான பேச்சு
உடலுறவு குறித்த விஷயங்களில் வெளிப்படை தன்மை அவசியம். பாலியல் ரீதியான செயல்பாடுகள் குறித்து உங்கள் துணையுடன் உரையாடுங்கள். பாலுறவு இல்லாத கவலைகள் குறித்தும் உரையாடுகள். அப்படி பேசாத தம்பதிகளுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் துணையுடன் இனிமையாக பேசி நேர்மறையாகவும் நெருக்கமாகவும் இருப்பது பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும். இருவரும் நிம்மதியான உறவை பெறலாம்.
இதையும் படிங்க: பெண்களை ஈர்க்கும் ஆண்கள் யார் தெரியுமா? நீங்க இப்படிப்பட்ட ஆளா இருந்தா உங்களத்தான் விரும்புவார்களாம்!!
கவலையால் உச்சகட்டம் பாதிப்படையுமா?
ஒரு நபர் கவலையுடன் உடலுறவில் ஈடுபட்டால் அவர் உச்சகட்டத்தை அடையும் திறன் பாதிப்படுகிறது. உங்களுடைய பாலுணர்வு தூண்டப்படுவதில் கவலையும் சிரமமும் ஏற்படலாம். நீங்கள் கவலையான மனநிலையில் உடலுறவு கொள்ளும் போது விறைப்பு கோளாறுகள், உச்சக்கட்டத்தை அடைவதில் சிக்கல் ஆகியவை ஏற்படலாம். பாலியல் பற்றிய கவலை உங்களுக்கு ஏற்பட்டால் மனநல ஆலோசகரை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது.
இதையும் படிங்க: பெண்களுக்கு வயதாகும்போது காம இச்சைகள் எதுவுமே இருக்காதா? உண்மை என்னனு தெரியுமா?