- Home
- Lifestyle
- Parenting Tips: அப்பாக்களே கவனம்! மகன் தப்பு செய்தால் இந்த 5 விஷயங்களை சொல்லவே சொல்லாதீங்க
Parenting Tips: அப்பாக்களே கவனம்! மகன் தப்பு செய்தால் இந்த 5 விஷயங்களை சொல்லவே சொல்லாதீங்க
Parenting Tips: குழந்தைகள் தவறு செய்வது அவர்களின் வளர்ச்சியில் இயல்பான ஒரு பகுதியாகும். ஆனால், அந்தத் தவறை சுட்டிக்காட்டும்போது பெற்றோர் பயன்படுத்தும் வார்த்தைகள் குழந்தையின் மனதில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

தந்தை மகனிடம் சொல்லக்கூடாத 5 வார்த்தைகள்
பிள்ளைகள் தவறு செய்வது இயல்பு. குறிப்பாக, வளரும் பருவத்தில் இருக்கும் ஆண் பிள்ளைகள் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவறுகள் செய்யலாம். அந்தத் தவற்றால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல அந்த நேரத்தில் அப்பாக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளும் மிக முக்கியம்.
அப்பா சொல்லும் ஒரு வார்த்தை மகனிடம் மாற்றத்தைக் கொண்டுவரலாம், அதே சமயம் அவனது தன்னம்பிக்கையை உடைக்கவும் செய்யலாம். அதனால், மகன் தவறு செய்யும்போது அப்பாக்கள் சில வார்த்தைகளைச் சொல்லவே கூடாது. அவை என்னென்ன என்று பார்ப்போம்.
உன்னால் எதுவும் முடியாது என்று சொல்வது
மகன் ஒரு தவறு செய்ததற்காக, அவனது மொத்த திறமையையும் கேள்விக்குட்படுத்துவது சரியான முறை அல்ல. இதுபோன்ற வார்த்தைகள் பையனின் மனதில் ஆழமாகப் பதிந்து, 'நான் உண்மையிலேயே ஒன்றுக்கும் உதவாதவன்' என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.
தவறை அவனது குணத்துடன் முடிச்சுப் போடாமல், அதை எப்படி சரிசெய்வது என்று சொல்லிக்கொடுப்பதுதான் முக்கியம். தவறு செய்த மகனை மட்டம் தட்டுவதை விட, அதிலிருந்து மீண்டுவர வழி காட்டுவதே ஒரு தந்தையின் பொறுப்பு.
உன்னைப் பார்த்தால் அசிங்கமாக இருக்கிறது என்று சொல்வது
ஒரு தந்தை சொல்லும் சில வார்த்தைகள் மகனின் மனதை அதிகமாக காயப்படுத்தலாம். குறிப்பாக, மற்றவர்கள் முன்னால் இந்த வார்த்தையைச் சொல்வது, அவனை அவமானப்படுத்தி, தந்தையிடம் தனது பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளவே பயப்பட வைக்கும்.
தவறு செய்யும்போது, மகன் தனது செயலுக்காக வெட்கப்பட வேண்டுமே தவிர, ஒரு தனி நபராக அவன் வெட்கப்படத் தேவையில்லை என்பதை அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். தவறை கண்டிப்பது வேறு, அந்த நபரை கண்டிப்பது வேறு. இந்த விஷயத்தை தந்தை நினைவில் கொள்ள வேண்டும்.
பக்கத்து வீட்டு பையனைப் பார்த்து கற்றுக்கொள் என்று சொல்வது
பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவது மிகவும் சுலபம். நல்ல மதிப்பெண் வாங்கியவர்களைக் காட்டி, 'நீ ஏன் அப்படிப் படிக்க மாட்டேங்குற?' என்று கேட்பது தந்தைக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், மகன் அதை ஒரு ஊக்கமாக எடுத்துக்கொள்ள மாட்டான்.
மாறாக, அவன் மீது அவனுக்கே இருக்கும் நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஒவ்வொரு பையனுக்கும் அவனுக்கென தனித்திறமை, வேகம் மற்றும் ஆர்வங்கள் இருக்கும். எனவே, மற்றவர்களுடன் ஒப்பிடாமல், அவனது கடந்தகால செயல்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது நல்லது.
நீ எப்போதுமே இப்படித்தான் செய்வாய் என்று சொல்வது
நீ என் மகனாக இருந்தால் இப்படி செய்திருக்க மாட்டாய் என்று சொல்வது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

