Asianet News TamilAsianet News Tamil

பூண்டு சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்…

the benefits-of-eating-garlic
Author
First Published Dec 19, 2016, 12:47 PM IST


மூளைக் காய்ச்சல் நோயைக்கூட குணப்படுத்தவல்லது. மூளைக்காய்ச்சல் உள்ள குழந்தைகளை பூண்டை நசுக்கி முகர்ந்துவரச் செய்ய விரைவில் மூளைக் காய்ச்சல் குணமடையும்.

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம்.

பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.

பூண்டை உணவில் சேர்த்தால் நல்லது. ஆனால் அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன. அதனால், அப்படியே கடித்து விழுங்குவது மிகவும் நல்லது.

தொண்டை கரகரப்பாக இருந்தால் நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விட்டால் உடனே சரியாகும்.

சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால் சர்க்கரை அளவை சீராக்குகிறது. இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

பூண்டில் "அலிசின்" என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு. மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும் அலர்ஜி நீங்கிவிடும்.

பல் வலி வந்தால் ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் பல்வலி போய்விடும்.

தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டால் ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் என எதுவும் வராது.

பூண்டு சாப்பிட்டால் மூச்சு விட்டாலும் அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios