கல்லீரல் பாதிக்கப்பட்டதை உணர்த்தும் 5 முக்கிய அறிகுறிகளை குறித்து இங்கு பார்க்கலாம்.

கல்லீரல் என்பது நம்முடைய உடல் உறுப்பிகளிலேயே மிகவும் முக்கியமான உறுப்பாகும். நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை சரியான முறையில் பிரிக்கவும், அதை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றவும் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவுகிறது.

ஆனால், தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சில தவறுகளால் கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படுகிறது. மேலும் அதன் பாதிப்பு தீவிரமடைந்த பிறகுதான் நமக்கு தெரிய வருகிறது. ஆய்வுகள் படி, உலகளவில் கல்லீரல் பிரச்சனையால் ஆண்டுக்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், நம்முடைய கல்லீரல் பாதிக்கப்பட்டால் முன்கூட்டியே சில அறிகுறிகள் தெரியுமாம். அவற்றை புறக்கணித்தால் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். எனவே கல்லீரல் பாதிக்கப்பட்டதை உணர்த்தும் 5 முக்கிய அறிகுறிகளை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

கல்லீரல் பாதிக்கப்பட்டதை உணர்த்தும் அறிகுறிகள் :

1. அதிகப்படியான சோர்வு

நீங்கள் திடீரென எந்த காரணமும் இல்லாமல் அதிகப்படியான சோர்வு, பலவீனமாக உணர்ந்தால் அதை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் அது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதுதான் கல்லீரல் பாதிப்பின் முதல் அறிகுறியாகும். கல்லீரல் நம்முடைய ஆற்றல் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவேளை அதன் செயல்பாடு குறைந்து விட்டால் ஆற்றல் நிலைகளும் பாதிப்படைந்து விடும்.

2. கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாகுதல்!

கல்லீரல் இரத்தத்தில் உள்ள பிலிரூபின் என்ற பொருளை வெளியேற்றும். ஆனால் கல்லீரல் சேதமடைந்தால் பிலிரூபின் உடலில் குவிய ஆரம்பிக்கும் இதனால் நம்முடைய கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறிவிடும். எனவே இந்த அறிகுறிகள் வந்தாலும் உடனே மருத்துவரை அனுகுவது நல்லது.

3. வயிற்றின் வலது பக்கத்தில் வலி

உங்களது வயிற்றின் வலது பக்கத்தில் அதுவும் மேல் பகுதியில் தொடர்ந்து வலியை நீங்கள் அனுபவித்தால் அது கல்லீரல் வீக்கமடைந்து இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். சில சமயம் வயிற்றுக்குள் திரவம் இருப்பது போலவும் வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தும்.

4. மலம் மற்றும் சிறுநீரில் நிறம் மாற்றம் :

கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தால் மலம் மற்றும் சிறுநீரில் நிறம் மாற்றம் ஏற்படும். அதாவது சிறுநீர் நிறம் கருமையாகவும், மலத்தின் நிறம் வெளிர் அல்லது சேறு போன்று இருக்கும்.

5. திடீர் எடை குறைவு, பசியின்மை

செரிமானத்திற்கும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் கல்லீரல் உதவுகிறது. ஆனால் அது பாதிக்கப்பட்டு இருந்தால் பசியின்மை ஏற்படும் மேலும் திடீரென உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

மேலே சொன்ன அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினால் அதை ஒருபோதும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.