1 மணி நேரம் இதயத்துடிப்பு இல்லை.. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் புத்துயிர் பெற்றது எப்படி?

சமீபத்தில் 32 வயதான நபர் ஒருவர் மிகப்பெரிய மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

No heartbeat for 1 hour.. How is a heart attack person revived through cpr Rya

ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு தற்போது வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் நிகழ்வுகளை சமீபகாலமாக நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் 32 வயதான நபர் ஒருவர் மிகப்பெரிய மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரது இதயத் துடிப்பு இல்லாத நிலையில், அவரை உயிர்ப்பிக்க மருத்துவர்கள் குறைந்தது 45 நிமிடங்களுக்கு சிபிஆர் சிகிச்சை அதாவது இதய புத்துயிர் சிகிச்சை கொடுத்தனர்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி, இதயத் துடிப்பு திரும்பவில்லை என்றால் CPR பொதுவாக 40 நிமிடங்களுக்குப் பிறகு நிறுத்தப்படும். இருப்பினும், நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் இருதயநோய் நிபுணர் - டாக்டர் ரிஷி லோஹியா, நோயாளியின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இதயத் துடிப்பு சீராகும் வரை சிபிஆர் சிகிச்சையை தொடர்ந்தார். இதை தொடர்ந்து நோயாளி மீண்டும் புத்துயிர் பெற்றார். நோயாளி ஒரு மாதத்திற்கும் மேலாக ஐசியுவில் கழித்தார், இப்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

டாக்டர். ரிஷி லோஹியாவின் கூற்றுப்படி, முதல் CPR 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தது, அப்போது இதயத் துடிப்பு 30 வினாடிகள் பதிவு செய்யப்பட்டது, ஆனால் அவசரநிலை காரணமாக அது ஆவணப்படுத்தப்படாமல் போனது.

வழக்கமாக, தொடர்ச்சியான சிகிச்சை கொடுக்கும் போது, ஒரு நோயாளி விலா எலும்பு முறிவு மற்றும் தோல் எரிச்சலால் பாதிக்கப்படுகிறார்; இருப்பினும், இந்த வழக்கில் அது எதுவும் நடக்கவில்லை. நல்ல CPR காரணமாக இந்த நோயாளி இந்த இரண்டு பக்க விளைவுகளையும் சந்திக்கவில்லை." என்று தெரிவித்தார்.

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நபர், எரிச்சல் உணர்வு இருப்பதாக புகார் அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு மயங்கி விழுந்தார். மேலும் வெகு நேரமாக இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டதால் அவதிப்பட்டார், இதன் காரணமாக அவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் இயல்பான செயல்பாடு பாதிக்கப்பட்டது, மேலும் அவர் கோமா நிலைக்குச் சென்றார், இது பல சிக்கல்களை உருவாக்கியது.

சிபிஆர் புத்துயிர் பெறுதல் எவ்வளவு முக்கியம்?

CPR என்பது ஒரு உயிர் காக்கும் நுட்பமாகும், இது ஒருவரின் இதயத்துடிப்பை மீட்டெடுக்க உதவும். ஒரு நபருக்கு உயிர்வாழ்வதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்க உதவும். நிபுணர்களின் கூற்றுப்படி, CPR என்பது எவரும் பயன்படுத்தக்கூடிய மற்றும் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு எளிதான நுட்பமாகும்,  இது வழக்கமான இதயத் துடிப்பு திரும்பும் வரை முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை வைத்திருக்கும். ஆக்சிஜனின் சுவாசம் இதயத் தடுப்பு உள்ள நபருக்கு அதிக ஆக்ஸிஜனைக் கொண்டுவருகிறது.

சிபிஆர் சிகிச்சை எப்போது கொடுக்க வேண்டும்.?

ஒரு நபர் மயங்கி விழுந்தாலோ, அல்லது பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது சுவாசிக்கவில்லை என்றாலோ அல்லது நாடித்துடிப்பு இல்லை என்றாலோ கொடுக்க வேண்டும்.

ஹை கொலஸ்ட்ரால் பரிசோதனை.. நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..

சிபிஆர்செய்வது எப்படி?

  • ஒருவரின் உயிரைக் காப்பாற்ற CPR ஐச் செய்ய நீங்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
  • ஒரு நபர் மூச்சு விடுவதை நிறுத்தினால், உங்கள் கைகளில் ஒன்றை மற்றொன்றின் மேல் வைத்து அவரது மார்பின் நடுவில் வைக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு குறைந்தது 100-200 முறை அழுத்தி, ஒவ்வொரு முறையும் 2 இன்ச் கீழே மார்பில் அழுத்தவும். 
  • பாதிக்கப்பட்ட நபர் புத்துயிர் பெறும் வரை அல்லது மருத்துவ உதவி வரும் வரை மார்பு அழுத்தங்களை தொடர நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மறுப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதனை தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios