உயர் இரத்த அழுத்தத்தை குறிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இரவு பழக்கத்தை தினமும் பின்பற்றினால் போதும்.

உலக அளவில் கிட்டத்தட்ட பாதி பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கில் ஒருவர் மட்டுமே அதை கட்டுக்குள் வைத்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளன. அந்த வகையில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் அதை ஆரோக்கியமான வரம்பிற்குள் குறைக்க உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது மிகவும் அவசியம். அந்த வரிசையில் இரவு நேர பழக்கங்களை சேர்க்கலாம்.

அதாவது தினமும் இரவு தூங்கும் முன் சில பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உயர் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும் என்று இருதய மருத்துவர் கல்ரா கூறுகிறார். அவரது கூற்றுப்படி, உயர் ரத்த அழுத்தத்தை குறைய நீங்கள் பின்பற்றும் சில பழக்கங்கள் உங்களுக்கு நம்ப முடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என்று கூறுகிறார். முக்கியமாக, 'ஆரோக்கியமான தூக்கத்தில் கவனம் செலுத்தும் ஒரு நிலையான இரவு பழக்கத்தை பின்பற்றுவது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார்.

கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது. தூக்கமின்மை ஏற்படும் போது இந்த ஹார்மோன்கள் நிர்வகிக்கும் உடலின் திறன் பாதிக்கப்பட்டு உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்கிறார். அதுமட்டுமல்லாமல் போதுமான தூக்கம் இல்லை என்றால் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி போன்ற பிற வாழ்க்கை முறையும் பாதிக்கப்படும். இதனால் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கல்ரா கூறுகிறார்.

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது எப்படி?

தேசிய சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் தூங்க வேண்டும். அதற்கும் குறைவாக நீங்கள் தூங்கினால் உயரத்த அழுத்தம் மட்டுமல்ல நினைவாற்றல் பிரச்சனை, தலைவலி, அதிகப்படியான சோர்வு, பதட்டம், பகல் நேரத்தில் தூக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரி இப்போது உங்களது தூக்கத்தின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

1. தூங்கும் வரை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும் வை!

நல்ல தூக்கத்திற்கு உங்களது படுக்கையறையை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும் வைத்திருங்கள். ஏனெனில் நாம் தூங்கும் போது நம்முடைய உடலின் வெப்பநிலை இயற்கையாகவே குறையும். குளிரான சூழல் உங்களது மூளைக்கு ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் இது என்று சிக்னல் கொடுக்கும்.

2. மன அமைதி அவசியம் ;

நீங்கள் தூங்கும் முன் அமைதியான செயலில் ஈடுபடுவது உங்களுக்கு அதிக மற்றும் நிம்மதியான தூக்கத்தை பெற உதவும் என்று இருதய நிபுணர் ஒருவர் கூறுகிறார். இதற்கு உங்களுக்கு பிடித்த புத்தகம் படிக்கலாம், அமைதியான இசை கேட்கலாம். ஆனால், தூங்குவதற்கு முன் செல்போன் டிவி கம்ப்யூட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இவற்றை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் நல்ல தூக்கத்தை பெறுவது மட்டுமல்லாமல் இரத்த அழுத்தத்தில் நன்மை பயக்கும் மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர் கூறுகிறார்.

3. இரவு சாப்பாட்டில் கவனம்!

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, நீங்கள் இரவு என்ன சாப்பிடுகிறீர்கள்? என்ன குடிக்கிறீர்கள்? என்பதில் அதிக கவனம் தேவை என்று இருதய நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் இரவு நேரத்தில் மது குடித்தாலோ அல்லது சிகரெட் அடித்தாலோ உங்களது இதயத்துடிப்பு கடுமையாக அதிகரிக்கும் மேல் மற்றும் காலை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று டாக்டர் கல்ரா கூறுகிறார். அதுமட்டுமல்லாமல், இரவில் அதிக உணவு சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதிக கொழுப்பு மற்றும் அதிக சோடியம் உள்ளதை. ஏனெனில் இவை உங்களது தூக்கத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் இரத்த அழுத்தத்தை எதிர்மறையாக பாதிக்கும்.

4. மருந்துகளை எடுத்துக் கொள்ள மறக்காதே!

நீங்கள் ரத்த அழுத்தத்திற்கு மருந்துகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக மாலை நேரத்தில் மருந்துகள் எடுக்க வேண்டி இருந்தால் மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட படி அதை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

- தரமான தூக்கம் உயரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்றாலும் சிலருக்கு அது போதுமானதாக இருக்காது எனவே உங்களது ரத்த அழுத்தம் தொடர்ந்து 130/80 க்கு மேல் இருந்தாலோ, அதிகப்படியான சோர்வு தலைவலி பார்வையில் மாற்றங்கள் போன்ற அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால் உடனே மருத்துவர் பார்க்க வேண்டும் என்று இருதய நிபுணர் கூறுகிறார்.

- தொடர்ச்சியாக நீங்கள் தூக்கமின்மை பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால் உடனே ஒரு தூக்கம் மருத்துவ நிபுணரை பார்ப்பது நல்லது.

- அதுபோல நீங்கள் பகலில் சத்தமாக குறட்டை விட்டாலோ அல்லது அதிக சோர்வாக உணர்ந்தால் ரத்த அழுத்தத்தை எதிர்மறையாக பாதிக்கும் ஒரு நிலையான சாத்தியக்கூறு இது. எனவே இதுகுறித்து உடனே இருதய மருத்துவரிடம் பேசுங்கள் என்று மருத்துவர் கல்ரா கூறுகிறார்.