எலும்பு தேய்மானம் முதல் கர்ப்பப்பை பிரச்சனை வரை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டிய இரண்டு கீரைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இதன் விளைவாக 30 வயதிற்கு பிறகு உடலில் பல விதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். உதாரணமாக, முடி உதிர்தல் முதல் கால் பாதங்கள் வரை பல பிரச்சினைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி, ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும் உடலில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இப்படி பெண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை சரி செய்ய, அவர்களது உடலில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருக்க வேண்டும். இதற்கு இரண்டு கீரைகள் உதவும். அது வேற ஏதுமில்லைங்க முடக்கத்தான் மற்றும் மணத்தக்காளி கீரை தான். அந்த இரண்டு கீரைகளும் பெண்களின் ஆரோக்கியத்தில் செய்யும் அற்புதங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை :

முடக்கத்தான் கீரை பொதுவாக வேலியில் தானாகவே முளைத்து கிடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவற்றின் இலையானது வேப்பிலையை போலவே இருக்கும். இந்தக் கீரையின் முக்கிய பயன் என்னவென்றால் வாத நோயிலிருந்து நிவாரணம் அளிப்பதுதான். முடக்கத்தான் கீரையில் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றது. அதாவது, ஆன்டி ஆக்சிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.

பெண்களுக்கு முடக்கத்தான் கீரையின் நன்மைகள் :

1. மூட்டு வலி

தற்போது பெண்களுக்கு 30 வயதிலிருந்து மூட்டு வலி, எலும்பு தேய்மானம், மூட்டு தேய்மானம், மூட்டு வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது இது. முடக்கத்தான் கீரையில் கால்சியம் மற்றும் அலர்ஜிய எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இவை எலும்பு சார்ந்த பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.

2. மாதவிடாய் பிரச்சனை :

பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி, வயிற்று பிடிப்பு, தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். முடக்கத்தான் கீரையில் இருக்கும் முக்கிய வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்யும்.

3. சரும பிரச்சினைகள் :

பெண்களுக்கு ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்ற சருமம் தொடர்பான பிரச்சினைகளையும் சரிசெய்ய முடக்கத்தான் கீரை உதவும். இதற்கு முடக்கத்தான் கீரை சாற்றில் தேங்காய் எண்ணெய் கலந்து அதை சருமத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு, பிறகு குளித்தால், சருமப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

4. கர்ப்பப்பை பிரச்சனைகள் :

கருப்பையில் தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்க முடக்கத்தான் கீரை உதவும். இது டீடாக்ஸ் போல செயல்படும். இதனால் கர்ப்பபை பலப்படும்.

மணத்தக்காளி கீரை ;

மணத்தக்காளி கீரையில் பல வகையான வைட்டமின்கள், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற போன்ற சத்துக்களுடன் நிறைய தாதுக்களும் உள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி இதில் அதிகமாகவே உள்ளது.

பெண்களுக்கு மணத்தக்காளி கீரையின் நன்மைகள் :

1. சிறுநீரக பிரச்சனை :

தற்போது முப்பது வயதிலிருந்து பல பெண்கள் சிறுநீர் சாந்த பல பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். சிறுநீர் கசிவு, சிறுநீர் பாதை தொற்று இது போன்ற சிறுநீர் தொடர்பான பல பிரச்சனைகளை சரி செய்வதற்கு மணத்தக்காளி கீரை உதவும். எனவே இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது சிறுநீர் பிரச்சனை வருவதை தடுக்க மணத்தக்காளி கீரையை தினமும் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2. அல்சர் குணமாகும்

பொதுவாக அல்சர் பிரச்சனைகள் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இதை சரி செய்ய மணத்தக்காளி கீரை உதவும். ஏனெனில் மணத்தக்காளியில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் குளிர்ச்சி தன்மை வயிற்றுப் புண்ணை ஆற்றும். அதுமட்டுமின்றி வாய் புண்ணை இது ஆற்றும்.

எப்படி சாப்பிடனும்?

மணத்தக்காளி கீரை மற்றும் முடக்கத்தான் கீரை இரண்டுமே பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதால் தினசரி உணவில் பல வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

  • இந்த இரண்டு கீரையையும் காய வைத்து அதை பொடியாக்கி இட்லி, தோசைக்கு பொடியாக எடுத்துக் கொள்ளலாம்.
  • இது இரண்டு கீரையையும் துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்புடன் சேர்த்து கடையலாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
  • மணத்தக்காளி கீரை மற்றும் முடக்கத்தான் கீரை ஆகியவற்றை புளி, சீகரம், பூண்டு, சிறிது தேங்காய் துருவல், சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து துவையலாக கூட அரைத்து சாப்பிடால் அருமையாக இருக்கும்.
  • மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயுடன் முடக்கத்தான் கீரையை சேர்த்து நன்கு காய்ச்சி அந்த எண்ணையை மூட்டில் தடவி வந்தால் விரைவில் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

பெண்களை 30 வயதிற்கு பிறகு நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க விரும்பினால் இந்த இரண்டு கீரைகளையும் உங்களது தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாதா அளவுக்கு பல நன்மைகளை பெறுவீர்கள்.