பெண்களை பாதிக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சினையிலிருந்து விடுபட ஆயுர்வேதத்தில் ஒரு சூப்பர் பானம் உள்ளது. அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளைப்படுதல் பிரச்சினை என்பது பெரும்பாலான பெண்களை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். பெண்களின் யோனியிலிருந்து ஒரு வெள்ளை திரவம் வெளியேறும். இது சாதாரணமானது என்றாலும் சில நேரங்களில் அதிகமாக வெளியேறும் மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்தவும்.
இத்தகைய சூழ்நிலையில், வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்கள் என்ன சாப்பிட வேண்டும்? அதற்குரிய சிகிச்சை என்ன ஏதேனும் வீட்டு வைத்தியம் உள்ளதா என்று தெடுகிறீர்களா? இதோ உங்களுக்காக ஒரு சூப்பர் வீட்டு வைத்தியம் உள்ளது அதுதான் 'அரிசி நீர்'. இந்த நீர் வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு எப்படி உதவும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு அரிசி நீர் :
இதுகுறித்து ஆயுர்வேத நிபுணர் ஒருவர் கூறுகையில், வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு அரிசி நீர் மிகவும் நன்மை பயக்கும். இது உடலில் இருந்து நீர் வெளியேறுவதை ஓரளவு தடுக்கும். எனவே, வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு கொடுக்கப்படும் மருந்தை பெரும்பாலும் அரிசி நீருடன் எடுத்துக் கொள்ள ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது சிறந்த பலனை தரும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
அரிசி நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சில அத்தியாவசிய வைட்டமின்கள் இருக்கிறது. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால் உடல் இன்னும் மோசமாக பலவீனமாகும் மற்றும் ரொம்பவே சோர்வாகவும் உணர்வீர்கள். எனவே இதற்கு அரிசி நீர் குடித்தால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும். அரிசி நீரில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலின் சோர்வை போக்கி, உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவும்.
பிறப்புறுப்பு தொற்றை குறைக்கும் :
அரிசி நீர் உடலை உள்ளிருந்து குளிர்விக்கவும், உடலின் pH அளவை சமநிலைப்படுத்தவும் உதவும். முக்கியமாக பிறப்புறுப்பில் பேட்டரி அல்லது பூஞ்சை தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் குறைக்கும். இதனால் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் படிப்படியாக குறையும்.
செரிமான அமைப்பை பலப்படுத்தும் :
செரிமானம் அமைப்பு தொடர்பான பிரச்சனைகளால் தான் உடலில் பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், அரிசி நீடானது செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். அரிசி நீர் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றவும், வெள்ளைப்படுதல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவும்.
ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் :
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை தான். அரிசி நீரானது உடலை குளிர்வித்து ஊட்டச்சத்துக்களை வழங்கும். ஹார்மோன் சமநிலை பராமரிக்க இது உதவுகிறது.
அரிசி நீர் தயாரிப்பது எப்படி?
ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு அரிசியை சேர்த்து நன்கு கொதித்ததும் அந்த நீரை வடிகட்டி ஆறவைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை வெறும் வயிற்றில், அதாவது காலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு :
வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு அரிசி நீர் நன்மை பயக்கும் என்றாலும், மருத்துவரின் ஆலோசனை கேட்காமல் எதையும் முயற்சிக்க வேண்டாம்.
