கோடையில் முகத்தை பாதுகாக்க அரிசி நீர் சருமத்திற்கு போடலாமா? நல்லதா?
அரிசியில் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும், அதன் பக்க விளைவுகளை பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Disadvantages And Advantages Of Rice Water On Skin : தற்போது அனைவரும் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சரும ஆரோக்கியத்தை பொறுத்தவரை பலர் அரிசி நீரை பயன்படுத்துவதை விரும்புகிறார்கள். அரிசியை ஊற வைத்த நீர் அல்லது வேகவைத்த பிறகு அதை நீரை சருமத்திற்கு பயன்படுத்துகின்றன. அரிசி சருமத்தை ஈரப்பதமாக்கும் திறனுக்காகவும், முன்கூட்டிய தோல் வயதாவதை தடுக்கவும் மக்கள் மத்தியில் பிரபலமடையில் உள்ளது. அரிசி நீரை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். மேலும் அதை உங்களது சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்கலாம்.
பல அழகு பிரண்டுகளில் அரிசி நீர் பயன்படுகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அரிசி நீரைக் கொண்டு மாய்ஸ்சரைசர்கள், சீரம்கள் மற்றும் கிரீம்கள் போன்ற பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பதில் ஆச்சரியமில்லை ஆனால் இது உண்மையில் சருமத்திற்கு நல்லதா? அரிசி நீர் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும், ஆனால் அரிசி நீரை பயன்படுத்துவதற்கு முன் முகத்தில் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றியும் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரிசி நீர் சருமத்திற்கு நல்லதா?
ஆம், அரிசி நீர் சருமத்திற்கு சில நன்மைகளை வழங்குகிறது. அரிசி நீர் முகத்தில் ஏற்படும் பக்க விளைவுகளை பேசுவதற்கு முன், அது நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. பளபளப்பான சருமம் : அரிசி நீர் இயற்கையான நொதிகள் மற்றும் ஆக்ஸிஜன் நெற்றிகளை கொண்டுள்ளதால், அவை மந்தமான சருமத்தை பிரகாசமாகவும், கரும்புள்ளிகளை குறைக்கவும், சருமத்தை பளபளப்பாகவும் வைக்க பெரிதும் உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2. முன்கூட்டியே வயதாவதை தடுக்கும் : அரிசி நீரில் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது முன்கூட்டியே வயதாவதை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதன் காரணமாக தான் தோல் பராமரிப்பு பயன்பாடுகளுக்கான மூலப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது.
rice water
3. சருமை எரிச்சலை ஆற்றும் : அரிசி நீர் முகத்தில் ஏற்படும் சிவத்தல் மற்றும் அரிப்பை தணிக்க உதவும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக இது வறண்ட மற்றும் அரிக்கும் தோல் அலர்ஜி போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்தது.
4. சரும அமைப்பை மேம்படுத்தும் : இயற்கையான ஸ்டார்ட்ஸ் சரும துளைகளை இறுக்கி சருமத்தை மென்மையாக்கவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.
5. சருமத்தை ஈரப்பதமாக்கும் : அரிசி நீர் இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்படுகிறது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கிறது. எனவே வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.
6. முகப்பருவை தடுக்கும் : அரிசி நீரில் இருக்கும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை குறைத்து அடைப்பட்ட துறைகளை சுத்தம் செய்து முகப்பரு ஏற்படுவதை தடுக்கும்.
முகத்தில் அரிசி நீர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
- அரிசி நீர் முகத்திற்கு ஈரப்பதத்தை வழங்கினாலும் அதை அடிக்கடி பயன்படுத்தினால் வறட்சிக்கு வழிவகுக்கும். குறிப்பாக சருமம் வறட்சி அடைந்தவர்கள், அதை அதிகமாக பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் உரிந்து, வறட்சி மற்றும் உரிதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனெனில் இது சற்று அமலத்தன்மை கொண்டதால், அதிகமாக பயன்படுத்தினால் சருமத்தின் இயற்கையான pH சமநிலையை பாதிக்கும்.
- அரிசி நீரை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். ஏனெனில் சிலருக்கு அரிசி நீர் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதன் காரணமாக சிவத்தல் அல்லது எரிச்சல் ஏற்படும்.
- அரிசி நீர் முகப்பருவை எதிர்த்து போராடும் என்றாலும் முறையற்ற முறையில் பயன்படுத்தினால் பருக்களை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதையும் படிங்க: வெறும் பழைய கஞ்சி தண்ணீர் போதும்.. பருக்கள் கரும்புள்ளிகள், நீங்கி ஜொலிக்கும் முகம்!!
- சரியாக சுத்தம் செய்யாமல் அரிசி நீரை நீண்ட நாள் பயன்படுத்தினால் சீரற்ற சரும நிறத்தை ஏற்படுத்தும். எனவே, உங்கள் சரும வகைக்கு ஏற்ப தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இதை பயன்படுத்துங்கள் என்று நிபுணர்கள் சொல்லுகின்றன.
- அரிசி நீர் சன் ஸ்கிரீன்களில் ஒரு சிறந்த மூலப்பொருளாக இருந்தாலும், அரிசி நீரை நீங்கள் நேரடியாக முகத்தில் பயன்படுத்தி வெயிலில் நடப்பது நல்லதல்ல. இதனால் உங்களது சருமத்தை புற ஊதா கதிர்கள் அதிகம் தாக்கும். குறிப்பாக நீங்கள் அதை சரியாக கழுவவில்லை என்றால் என்கின்றனர் நிபுணர்கள்.
- அரிசி நீரை அடிக்கடி பயன்படுத்துவது அல்லது முகத்தில் நீண்ட நேரம் வைத்திருப்பது அதிகப்படியான எக்ஸ்ஃபோலைட்டிங்க்கு வழிவகுக்கும். இது சருமத்தின் இயற்கையான தடையை சீர்குழித்து உணர்திறனுக்கு வழி வகுத்து விடும்.
இதையும் படிங்க: ஒரு செலவு இல்லாமல் நீங்களும் கொரியன் பெண்களைப் போல அழகாக இந்த பார்முலாவை ட்ரை பண்ணுங்க..!!
அரிசி நீரை சரியான முறையில் பயன்படுத்தும் வழிகள்:
டோனராக : அரிசி நீரில் ஒரு பஞ்சை நனைத்து அதை உங்களது முகத்தில் தடவலாம்.
முகமூடியாக : அரிசி நீரில் முல்தானி மிட்டி அல்லது கற்றாழை ஜெல் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
குறிப்பு : அரிசி நீரால் முகத்தில் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்க நீங்கள் அதை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை மட்டுமே பயன்படுத்துவது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.