உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை மூன்றே வாரத்தில் குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 விஷயங்களை மட்டும் தினமும் பின்பற்றினால் போதும்.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் காரணமாக உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தான நோயை ஏற்படுத்தும். மேலும் இந்நோய்களின் தொடர்ச்சியாக சர்க்கரை நோய், கல்லீரல் நோய், பக்கவாதம், சீறுநீரகம் தொடர்பான நோய்களும் ஏற்படும். மேலும் கெட்ட கொழுப்பின் ஆரம்பத்தில் சோர்வு, மூச்சிரைப்பு போன்ற ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். எனவே இந்த பதிவில் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை மூன்றே வாரத்தில் குறைப்பது எப்படி என்று காணலாம்.
தேவையற்ற கொழுப்புகளை குறைப்பது எப்படி?
ஆல்கஹால் மற்றும் சிகரெட் :
உங்களிடம் ஆல்கஹால் மற்றும் சிகரெட் பழக்கம் இருந்தால், உடனேயே அதை விட்டுவிடுங்கள். ஏனெனில், இந்த பழக்கங்கள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் தெரியுமா? ஆம், புகைபிடித்தல் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை குறைத்துவிடும். நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் மூன்று மாதங்களுக்குளே நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக இயங்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
அதுபோல நம் உடலில் இருக்கும் கல்லீரல் கெட்ட கொழுப்பை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் மதுபானம் கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்தி அதன் செயல்பாட்டை பாதிக்கும். கல்லீரல் பிரச்சனையானது நாளடைவில் நீரிழிவு நோயையும் ஏற்படுத்தும். பிறகு அதிகப்படியான சர்க்கரை காரணமாக உடலில் கெட்ட கொழுப்பு தேங்கும். எனவே மதுவை குடிப்பதை நிறுத்துவதன் மூலமும் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கலாம்.
ஆரோக்கியமான உணவு :
நீங்கள் சாப்பிடும் உணவில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் இருந்தால் அது ரத்தத்தில் கலந்து கொழுப்பாக மாறிவிடும். முக்கியமாக தினசரி குடிக்கும் பானங்களும் கூட கொழுப்பை அதிகரிக்க கூடும். அதாவது குளிர்பானங்கள், ஊட்டச்சத்து பானங்கள், பழச்சாறுகள் போன்றவை உடலில் அதிகமான கெட்ட கொழுப்பை உருவாக்கும். எனவே இவற்றிற்கு பதிலாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள், சிறு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தலாம். கூடவே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளையும் அதிகமாக சாப்பிடுங்கள். ஏனெனில் இவை உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும்.
அதுமட்டுமின்றி எண்ணெயில் பொறித்த உணவுகளுக்கு பதிலாக வேகவைத்த உணவுகளை சாப்பிடுங்கள். இதனால் உடலில் கொழுப்பு சேருவது தடுக்கப்படும். இனிப்புகள் அதிகமாக சாப்பிடுவதும் தவிர்ப்பது நல்லது. கடல் உணவுகள் கோழி காடை சாப்பிடலாம்.
ஆரோக்கியமான எடை
கெட்டு கொழுப்பிற்கும் எடைக்கும் தொடர்பு உண்டு தெரியுமா? நீங்கள் எடையை குறைக்க முயற்சி செய்யும்போது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பும் குறைய ஆரம்பிக்கும். ஆகவே சுறுசுறுப்பான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதன் மூலம், உடல் எடையை சரியாக பராமரிப்பது மூலமும் உடலில் கொழுப்பு தேங்குவதை தவிர்க்கலாம்.
தினசரி உடற்பயிற்சி
கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்க தினமும் சுமார் அரை மணி நேரமாவது கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சி தான் கெட்ட கொழுப்பு கரைய முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் கடினமான உடற்பயிற்சிக்கு பதிலாக சிறிது நேரம் வாக்கிங், யோகா போன்ற சுலபமான பயிற்சிகளை செய்யலாம். இவை உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்க உதவும்.
மேலே சொன்ன 4 பழக்கங்களையும் நீங்கள் தினமும் கடைப்பிடித்து வந்தால் மூன்றே வாரத்தில் கெட்ட கொழுப்பு குறைவதை நீங்களே உணர்வீர்கள்.
