நிறைய தண்ணீர் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.

முந்தைய காலத்தில் உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் முதுமையின் நோயாக தான் கருதப்பட்டது. ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் வேகமாக அதிகரிக்கிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் உயர் இரத்த அழுத்தம் அதிகமாக அதிகரித்துவருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் காரணமாக இதய நோய், சிறுநீரகப் பிரச்சனை உட்பட்ட பல உடல்நல பிரச்சனைகள் வரக்கூடும்.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், இன்றைய மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் அதிகப்படியான மனஅழுத்தம் போன்ற பல காரணங்களால் இளைஞர்கள் மத்தியில் உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பதாக கூறுகின்றனர்.

ஆனால், தண்ணீர் குடிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். எனவே உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க அல்லது குறைக்க ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.

உயர் இரத்த அழுத்தம் குறைய தண்ணீர் எப்படி உதவும்?

நிபுணர்களின் கூற்றுப்படி உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர், அதாவது 240 மில்லி லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இது அனைவருக்கும் தெரிந்தது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில், தண்ணீர் உடலில் இருக்கும் அதிகப்படியான சோடியம் உட்பட்ட அனைத்து நச்சுக்கள் மற்றும் கழிவுகளை ரத்தத்திலிருந்து நீக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தமும்! நெல்லிக்காய் சாறு!

வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் கண்டிப்பாக சலிப்பை ஏற்படுத்தும். எனவே நெல்லிக்காய் சாறு குடியுங்கள். இதுவும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று பலருக்கும் தெரியாது. நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. மேலும் இதில் இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் வீக்கத்தை எதிர்த்து போராடவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ரத்த நாளங்களை தளர்த்தவும் உதவும். இதனால் ரத்த அழுத்த அளவு குறையும்.

அதுமட்டுமல்லாமல் நெல்லிக்காய் சாறு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல் திறனை அதிகரிக்கும், ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து ஆக்சிஜனற்ற அழுத்தத்திற்கு எதிராக போராடும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்கியங்களை அழிக்கும்.

Silent Killer ஆன உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் சைலன்ட் கில்லர் (Silent killer) என்று அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணம், இது உலகளவில் சுமார் 1.28 பில்லியன் மக்கள் அதுவும், 30-80 வயதுள்ளவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் சுமார் 46% மக்கள் தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது கூட தெரியாது. காரணம் உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்தவித அறிகுறியும் கிடையாது. அது தீவிரமாகும் போது தான் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களை காட்டத் தொடங்கும்.

உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்க சில வழிகள் :

- உணவில் அதிக உப்பு சேர்க்க கூடாது.

- ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட கூடாது. ஆரோக்கியமுள்ள உணவுகளை சாப்பிடுங்கள்

- கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

- பீடி, சிகரெட் மற்றும் மது அருந்துவதை நிறுத்துங்கள்.

- உடல் பருமனாக இல்லாமல், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்.

- பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்