தீவிர கண் பிரச்சனை தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காமல் உடனே அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு வகையான கண்தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதுவும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் அதிக நேரம் செலவிடுவதால், பலவிதமான கண் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த கண் பிரச்சனைக்கு வெறும் மொபைல் போன், லேப்டாப் மட்டும் காரணமல்ல, ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளும் அடங்கும். ஆம், நம்முடைய உடலில் ஏதேனும் ஒரு உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அதன் தாக்கம் முதலில் கண்ணில் தான் தெரியும். கண் பிரச்சனை இருந்தால் கூட ஒரு சிலர் அதை சரியாக கவனிக்காமல் அசால்டாக விட்டுவிடுகிறார்கள். இதனால் பார்வை கூட இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
அந்த வகையில், ஒரு போதும் புறக்கணிக்கவே கூடாது தீவிர கண் பிரச்சனைகள் தொடர்பான சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். அவை என்னென்ன என்பது குறித்து இப்போது இங்கு பார்க்கலாம்.
கண் பிரச்சனை தொடர்பான அறிகுறிகள் :
கண்களில் அடிக்கடி நீர் வடிதல் மற்றும் கண் சிவந்து காணப்படுதல் :
உங்களது கண்களில் இருந்து அடிக்கடி நீர் வடிகிறதா? அல்லது சிவந்து போகிறதா? குறிப்பாக லேப்டாப் ,மொபைல் போன் பயன்படுத்தும்போது கண்களில் நீர் வடிந்தாலோ அல்லது கண் எரிச்சல் ஏற்பட்டாலோ அதில் தீவிர கண் பிரச்சனையின் அறிகுறியாகும். எனவே இதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
கண்களில் வலி மற்றும் மங்கலான பார்வை :
உங்களது கண்களில் வலி ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு பொருளை பார்க்கும் போது அது மங்கலாக தெரிந்தாலோ அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உடனே மருத்துவர் அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
அடிக்கடி தலைவலிப்பது :
உங்களுக்கு அடிக்கடி தலை வலி வருகிறதா? அதுவும் குறிப்பாக நெற்றி, புருவங்கள் சுற்றி, புருவங்களுக்கு இடையே போன்ற பகுதிகளில் வலி மிகுதியாக ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.
கண் முன் ஏதாவது ஒன்று மிதப்பது போல தெரிவது :
கண்களுக்கு முன் ஏதாவது மிதக்கிறது போல உங்களுக்கு தெரிகிறதா? அதாவது வெறும் சுவரை பார்க்கும் போது ஏதாவது மிதப்பது போல தெரிகிறதா? அப்படியானால் உடனே கண் மருத்துவரிடம் சென்று கண்களை பரிசோதனை செய்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
திடீரென பார்வை இழப்பு :
உங்களுடைய ஒரு கண் அல்லது இரண்டு கண்ணும் திடீரென பார்வை இழப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொல்லப்பட்டுள்ள ஏதேனும் அறிகுறிகள் உங்களது கண்ணில் தோன்றினால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உடனே மருத்துவர் அணுகி அதற்குரிய சிகிச்சையை பெற்று, உங்களுடைய கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
