அது என்ன Eris? வேகமாக பரவும் புதிய வகை கொரோனா ஆபத்தானதா? நிபுணர்கள் விளக்கம்

இங்கிலாந்து சுகாதார நிறுவனம், கடந்த வாரத்தை விட இந்த வாரம் கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.. 

Eris : Is the fast-spreading new covid varinant dangerous? Experts explain

இங்கிலாந்தில் சமீபத்தில் பரவிய புதிய கொரோனா மாறுபாடு, கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை காட்டி உள்ளது.. Eris அல்லது EG.5.1 வகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் கண்டறியப்பட்ட ஒரு புதிய மாறுபாடு ஆகும். ஜூலை இரண்டாவது வாரத்தில் EG.5.1 மாறுபாட்டின் 11.8 சதவீத பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுகாதார நிறுவனம், கடந்த வாரத்தை விட இந்த வாரம் கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.. 

இதனிடையே கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதற்கான காரணத்தை சுகாதார நிபுணர்களும் ஊகித்துள்ளனர். அதன்படி  சமீபத்திய திரைப்படங்களைப் பார்ப்பதற்காக திரையரங்குகளில் அதிகளவிலான மக்கள் கூடியது கொரோனா வேகமாக பரவுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். Barbie மற்றும் Oppenheimer திரைப்படங்கள் வெளியானதை குறிப்பிட்டு, ''Barbenheimer effect என்று அழைத்தனர். அதனுடன் தட்பவெப்ப நிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும் காரணங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்

உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்த புதிய மாறுபாட்டை ஆராயத் தொடங்கியுள்ளது. எரிஸ், புதிய மாறுபாடு ஏழு நபர்களில் ஒருவரை பாதிக்கும் என்றும் அது மற்றொரு கோவிட் அலையை கொண்டு வரலாம் என்றும் இங்கிலாந்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, 4,403 மாதிரிகளில் 3.7 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 4,396 சுவாச மாதிரிகளில் 5.4 சதவீதம் புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதிஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அனைத்து பாதிப்புகளிலும் 14.6 சதவீதத்தை உருவாக்குகிறது என்றாலும், தீவிரத்தன்மையின் எந்த அறிகுறியையும் இந்த வகை கொரோனா காட்டவில்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் Eris வகை கொரோனாவின் அறிகுறிகளில் பெரிய மாற்றம் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நாடுகளில் உள்ள சுகாதார அதிகாரிகள், தலைவலி, காய்ச்சல் அல்லது மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளை அனுபவித்தால் விரைவில் கோவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஏன் திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது? முக்கிய காரணங்களே இவை தானாம்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios