நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் நுகர்வு திறன் உள்ள சிறந்த உணவு பொருள் வெங்காயம் மற்றும் பூண்டு. இது உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமின்றி ஆரோக்கியத்தை அதிகரிக்க சிறந்த சத்துக்களும் கொண்டுள்ளது. 

இதில் இருக்கும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடெண்ட் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். 

மேலும், வெங்காயத்தில் இருக்கும் சல்பர் காம்பவுண்டுகள் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக். இவை வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து வலுவாக சண்டையிடும். இதனால் தான் உணவில் வெங்காயத்தை ஒதுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பூண்டு, வெங்காயம் ஜூஸ்!

தேவையான பொருட்கள்!

இரண்டு கப் நீர் (500 மில்லி அளவு)

மீடியம் அளவிலான வெங்காயத்தில் பாதி.

இரண்டு பூண்டு பல்

செய்முறை:

இரண்டு கப் நீரை கொதிக்க வைக்கவும் (மீடியமான சூட்டில்). வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நீர் கொதித்தவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டை அதில் சேர்க்கவும். 

சூட்டின் அளவை குறைத்துக் கொண்டு (5 நிமிடம் வேக வையுங்கள்) பிறகு அறையின் தட்பவெப்ப நிலையில் ஆற வையுங்கள். ஆரிய பிறகு குடிக்கவும். உட்கொள்ளும் முறை! பாதி கப் அளவு குடித்தால் போதுமானது. 

குடிக்கும் அளவு சூடு இருக்கும் படியான நிலையில் பருகவும். இருமல் ஏற்படும் முதல் நிலையிலேயே நீங்கள் இதை குடிக்கலாம். ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு முறை குடித்து வரலாம். 

இருமலின் அளவை சார்ந்து நீங்கள் உட்கொண்டால் போதுமானது. இருமல் சரியாகும் வரை இதை நீங்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வரலாம்.