Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை அன்று 'இத' மட்டும் செய்யுங்கள்.. வருடம் முழுவதும் செழிப்பு தான்!

அட்சய திருதியை நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்று இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

dos and don'ts akshaya tritiya 2024 in tamil mks

அட்சய திருதியை இந்தியாவில், இந்து மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் இந்த பண்டிகை இந்த 2024 ஆண்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. உங்களுக்கு தெரியுமா.. அட்சய திருதியை நாளில் நீங்கள் எதைச் செய்தாலும், அது நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, அதற்கான பலன்vஎதிர்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும்; அதுவும் பத்து மடங்காக என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஆகையால், அந்த நாளில் நீங்கள் எதைச் செய்தாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரி வாங்க.. இப்போது உங்களுக்காக..vஅட்சய திருதியை நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்று இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்..

இதையும் படிங்க: அக்ஷ்ய திருதி 2023: அக்ஷய திரிதியின் முக்கியத்துவம் என்ன? வீட்டில் பூஜை செய்வது எப்படி? விவரம் இதோ!!

2024 அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை:

தங்கம் வாங்குங்கள்: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது வழக்கமாகிவிட்டது. ஏனெனில், இந்நாளில் தங்கம் வாங்கினால், வருடம் முழுவதும் அதிஷ்டத்தையும், செல்வத்தையும் கொடுப்பதாக நம்பிக்கை. மேலும், உங்கள் வீட்டில் பொருளாதார நல்வாழ்வும் கிடைக்கும். எனவே, இதற்கு முன் இந்நாளில் நீங்கள் தங்கம் வாங்கவில்லை என்றால் இந்த ஆண்டு கண்டிப்பாக 
வாங்குங்கள். 

வாகனம் வாங்கலாம்: அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமின்றி, கார் அல்லது மோட்டார் பைக் போன்றவற்றையும் வாங்கலாம். அந்நாளில், வாகனம் வாங்கினால், பாதுகாப்பாக பயணிப்பதை மற்றும் நீண்ட ஆயுளைக் குறிக்கிறது. மேலும் இந்நாளில் வாகனத்திற்கான சலுகைகள் இருப்பதால், நீங்கள்  வாகனம் வாங்க நினைத்தால், இந்நாளில், வாகனம் வாங்குவது நல்லது.

புதிய வீடு வாங்கலாம்: அட்சய திருதியை அன்று புதிய வீடு வாங்குவது உகந்ததாகக் கருதப்படுகிறது. நீங்கள் புதிய வீடு வாங்க விரும்பினால், அந்நாள் சிறப்பான நாளாகும். இதனால் தம்பதிகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள். அதுபோல, அந்நாளில் வீடு கிரஹ பிரவேஷம் செய்தால், தீய சக்திகள் விரட்டப்பட்டு, வீட்டில் நேர்மறை ஆற்றல் இருக்கும்.

புதிய தொடக்கம்: நீங்கள் புதிதாக ஏதேனும் தொழில் தொடங்க விரும்பினாலோ அல்லது நீங்கள் விரும்பும் வாழ்க்கை தொடர்பான விஷங்கள் போன்றவை செய்ய அந்நாள் உகந்தது. அந்த நாளில், நீங்கள் செய்யும் எந்த புதிய தொடக்கமும் எதிர்காலத்தில் உங்களுக்கு செழிப்பைக் கொடுக்கும்.

இதையும் படிங்க: அட்சய திருதியை 2024: எப்போது..? தங்கம் வாங்க நல்ல நேரம் எப்போது தெரியுமா..? 

2024 அட்சய திருதியை அன்று செய்யக்கூடாதவை:

கோபம் வேண்டாம்: அட்சய திருதியை நாள் நல்ல நாளாக கருதப்படுகிறது. அந்நாள் நல்ல செயல்களை செய்வதற்கான நாள் என்பதால், யாருடைய மனதையும் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள். மேலும் அந்த நாளில் யாரிடமும் கசப்பானதாக பேசவோ அல்லது கோபம் கொள்ளவோ வேண்டாம். இதனால் லட்சுமி தேவி வருத்தப்படுத்தலாம். 

வீடு இருட்டாக இருக்க கூடாது: அட்சய திருதியை நாளில் வீட்டை ஒருபோதும் இருட்டாக வைக்க கூடாது. ஒருவேளை வீட்டில் ஏதாவது ஒரு பகுதி இருட்டாக  இருந்தால், உடனடியாக விளக்கு ஏற்றிவிடுங்கள். வீடு இருளாக இருந்தால், லட்சுமி தேவியின் அருள் வீட்டில் இருக்காது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios