MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வறுமை நீங்கி வளம் தரும் லட்சுமி குபேர பூஜை: முழுமையான வழிபாட்டு முறைகள்!

வறுமை நீங்கி வளம் தரும் லட்சுமி குபேர பூஜை: முழுமையான வழிபாட்டு முறைகள்!

Lakshmi Kubera Pooja Benefits in Tamil : லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்தின் அதிபதியான அன்னை மகாலட்சுமியையும், குபேர பகவானையும் இணைந்து வழிபடும் ஒரு உன்னத பூஜையாகும். இந்த பூஜை முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
Published : Mar 18 2026, 02:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Lakshmi Kubera Pooja Procedure
Image Credit : Asianet News

Lakshmi Kubera Pooja Procedure

குபேர பகவான் செல்வத்தின் அதிபதியாக கருதப்படுகிறார். இவரை முறையாக வழிபடுபவர்களுக்கு வீட்டில் நிலையான செல்வமும், வளங்களும் பெருகும் என்பதும், வருமானத்திற்கு எந்த பற்றாக்குறையும் ஏற்படாது என்பதும் ஐதீகம். வீட்டில் குபேர பூஜையை வழிபடுவதற்கான முறையான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
கலச ஸ்தாபனம் மற்றும் கோலம்
Image Credit : Asianet News

கலச ஸ்தாபனம் மற்றும் கோலம்

குபேர பூஜை செய்வதற்கு முன்பு வீட்டை தூய்மை செய்து வாசலில் மாவிலை தோரணம் கட்டி பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும். மகாலட்சுமி மற்றும் குபேரன் படம் அல்லது சிறிய விக்ரகங்களை ஒரு பலகையில் வைக்க வேண்டும். செம்பு அல்லது வெள்ளி தகட்டில் வரையப்பட்ட எந்திரம், 108 ஒரு ரூபாய் நாணயங்கள், செம்பு அல்லது பித்தளையாலான சிறிய குடங்கள் அல்லது செம்புகள், தேங்காய், மாவிலை, நிவேதனம் செய்வதற்கு சர்க்கரை பொங்கல், பாயாசம், கற்கண்டு, பால், பழங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், பூக்கள், அகல் விளக்குகள், ஊதுபத்தி, சாம்பிராணி ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

Related Articles

Related image1
குரு பகவானுக்கு பிடித்தமான அதிர்ஷ்ட ராசிகள்.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.! சொத்துக்கள் குவியும்.!
Related image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
36
பூஜை முறை (படிநிலை விளக்கம்)
Image Credit : Asianet News

பூஜை முறை (படிநிலை விளக்கம்)

பூஜை அறையில் ஒரு மரப்பலகை வைத்து அதன் மீது நுனி வாழை இலை விரித்து, பச்சரிசியை பரப்ப வேண்டும். அதன் மேல் கலசம் வைத்து சுத்தமான நீர் விட்டு, ஒரு நாணயம், ஒரு ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை இடவேண்டும். கலசத்தின் மேல் மாவிலைகளை பரப்பி அதன் நடுவில் மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். கலசத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அருகில் லட்சுமி மற்றும் குபேரன் திருவுருவப் படங்களை வைக்க வேண்டும். பீடத்தின் முன்பாக குபேர கோலம் இட வேண்டியது ஐதீகம்.ஒ படத்தில் காட்டப்பட்டிருப்பது போன்ற கோலத்தை வரைந்து அதன் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.

46
நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை
Image Credit : Asianet News

நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை

பூஜையை தொடங்குவதற்கு முன்னர் மஞ்சளில் விநாயகர் பிடித்து, அருகம்புல் சாற்றி, “ஓம் கணபதயே நமஹ:” என்று கூறி பூஜையை தொடங்கவும். கையில் சிறிதளவு அட்சதை மற்றும் பூக்களை எடுத்துக்கொண்டு பெயர், நட்சத்திரம் கூறி, “வீட்டில் வறுமை நீங்கி, செல்வம் பெருகவும், கடன் தொல்லை தீரவும் குபேர பூஜை செய்கிறேன்” என்று மனதார வேண்டிக்கொண்டு வடக்கு பக்கமாக அட்சதையை இட வேண்டும். லட்சுமி குபேர பூஜையில் 108 நாணயங்களை ஒரு தட்டில் வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை கூறி ஒவ்வொரு நாணயமாக விக்கிரகத்தின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்.

56
செல்வம் பெருக குபேர வழிபாடு
Image Credit : Pinterest

செல்வம் பெருக குபேர வழிபாடு

"ஓம் யட்சாய குபேராய வைஷ்ரவணாய தனதான்யாதி பதயே தனதான்ய சம்ருத்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா" இந்த மந்திரங்களை கூறி 108 முறை நாணயங்களால் அர்ச்சனை செய்வது வீட்டில் பண வரவை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமிக்கு உகந்த லட்சுமி அஷ்டோத்திரம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரம் வாசித்து மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அன்னைக்கு தாமரை மலர்கள் சமர்ப்பிப்பது மிகவும் விஷேசம்.

66
கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்
Image Credit : Asianet News

கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்

தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பொங்கல், பாயாசம், வெற்றிலைப் பாக்கு, பழங்களை நெய்வேதியம் செய்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். ஆரத்தியின் போது இந்த மந்திரங்களை சொல்ல வேண்டும். "செல்வம் தரும் லட்சுமியே போற்றி! நிதி தரும் குபேரனே போற்றி! எம்மைக் காக்கும் இறைவா போற்றி!" இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளைத் தரும்.

குபேரனின் அருளைப் பெறுங்கள்

குபேர பூஜையின் போது வடக்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்வது அதிக பலன்களைத் தரும். அர்ச்சனை செய்ய பயன்படுத்திய 108 நாணயங்களை மஞ்சள் துணியில் முடிந்து பணப்பெட்டி அல்லது பணம் வைத்திருக்கும் இடங்களில் வைப்பது ஐஸ்வர்யத்தை நிலைக்க செய்யும். பூஜை முடிந்த பின்னர் ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது குபேரனின் அருளைப் பெற்று தரும். இந்த முறையைப் பின்பற்றி நீங்களும் பயபக்தியுடன் பூஜை செய்தால் உங்கள் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் குபேரனின் அருளும் என்றும் நிலைத்திருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆன்மீகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
12 நாட்களில் 7 புண்ணியத் தலங்கள்! IRCTC வழங்கும் மெகா ஜியோதிர்லிங்க யாத்திரை
Recommended image2
குரு பகவானுக்கு பிடித்தமான அதிர்ஷ்ட ராசிகள்.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.! சொத்துக்கள் குவியும்.!
Recommended image3
இந்த செடிகளை வீட்ல வெச்சா பணக்கஷ்டம் நிச்சயம்! வாஸ்து சொல்லும் ரகசியம்
Related Stories
Recommended image1
குரு பகவானுக்கு பிடித்தமான அதிர்ஷ்ட ராசிகள்.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.! சொத்துக்கள் குவியும்.!
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved