Noise in your ears: காதில் இரைச்சலா இருக்கா? இதோ இருக்கு கைவைத்தியம்!

காதுகளுக்குள் இயற்கையாகவே சுரக்கும் மெழுகு பொருள் அடைத்துக் கொண்டால், தற்காலிகமாக காதில் இரைச்சல் சத்தம் கேட்கும்.
 

Do you have Noise in your Ears? Here is the remedies!

வயதான காலத்தில் முதியவர்களுக்கு பெரும்பாலும் காதில் ஏதேனும் இரைச்சல் சத்தம் கேட்க வாய்ப்புகள் உள்ளது. அந்த சத்தமானது விசில் அடிப்பது போன்றோ அல்லது ஒரு விதமான இரைச்சலாகவோ கூட இருக்கலாம். இது ஒரு நோயாக இருக்குமோ என்று சந்தேகம் வரும். ஆனால், இது நோய் கிடையாது. இருப்பினும் நோயின் வெளிப்பாடாக மட்டுமே இந்த இரைச்சல் சத்தம் இருக்கும். உடலில் ஏற்படும் மற்ற சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்க வாய்ப்புகள் உள்ளது.

காதில் இரைச்சல் சத்தம்

காதில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாகவோ அல்லது உடலின் மற்ற சில பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாகவோ கூட காதில் இரைச்சல் சத்தம் கேட்க வாய்ப்புகள் உள்ளது. இந்த சத்தம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். சிலருக்கு தொடர்ச்சியாக காதில் சத்தம் கேட்கலாம். வேறு சிலருக்கு விட்டுவிட்டோ அல்லது தாங்க முடியாத அளவுக்கும் கூட காதில் சத்தம் கேட்கலாம். காதுகளில் கேட்கும் இந்த சத்தத்தை தற்காலிகமானது மற்றும் நிரந்தரமானது என இரு வகைகளாக பிரிக்கலாம்.

தற்காலிக இரைச்சல்

காதுகளுக்குள் இயற்கையாகவே சுரக்கும் மெழுகு பொருள் அடைத்துக் கொண்டால், தற்காலிகமாக காதில் இரைச்சல் சத்தம் கேட்கும்.

நிரந்தரமான இரைச்சல்

நிரந்தரமானது என்றால் வயதாகிய பிறகு முதுமையில் ஏற்படுவதை குறிப்பிடலாம். வயோதிகத்தின் காரணமாக ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் காதுகளுக்கு செல்லும் இரத்தம் குறைபாடு போன்றவற்றால் இது ஏற்படுகிறது. ஆகவே காதில் இரைச்சல் சத்தம் கேட்டால், அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரைத் தொடர்பு கொண்டு, அதற்குத் தகுந்த சிகிச்சைகளை  எடுத்துக் கொள்வது தான் மிகவும் நல்லது.

ஆயுர்வேத மருந்துகள்

காதில் இரைச்சல் ஏற்படுவதை ஆயுர்வேதத்தில் கர்ணநாதம் என கூறுவார்கள். உட்காது பாதிப்பினால் தான் இது அதிகமாக வருகிறது. இந்த நோயில் வாதத்தை தணிக்கும் மருந்துகள் மிக முக்கியம்.

Cervical cancer: பெண்களே உஷார்: இந்த 6 அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையா இருங்கள்!

வசா லசுனாதி தைலம் எனும் தைலம் ஒன்று இருக்கிறது. காதில் நீர் ஏதும் இல்லாத போது இந்த தைலத்தை எடுத்து 1 துளி விடலாம். முருங்கை இலை மற்றும் வெள்ளைப்பூண்டு கஷாயம் சாப்பிடலாம். கண்டுபாரங்கி என்றொரு பொருள் இருக்கிறது. இது காது இரைச்சலைத் தீர்க்கும் சிறந்த மருந்து. காதில் சீழ் வடிந்தால், அந்நிலையில் எண்ணெய் ஊற்றக் கூடாது. இது அல்லாமல் நடைமுறையில் பயன்படுத்தும் கைமருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

கைமருந்துகள்

  • தூதுவளையை தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரைப் பருகலாம்.
  • முள்ளங்கியின் சாறு 50 மி.லி. எடுத்துக் கொண்டு, இஞ்சி 3 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம்.
  • தும்பைப்பூ, சுக்கு மற்றும் காயம் ஆகியவற்றை கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.
  • கடுகை நன்றாக அரைத்து, அதனைக் காதுக்குப் பின்புறம், பற்று போட்டு வைக்கலாம்.
  • பூண்டின் தோலை உரித்து தலைப் பக்கம் கிள்ளி விட்டு காதில் வைக்கலாம்.
  • தேனுடன் துளசிச் சாற்றைக் கலந்து குடித்து வரலாம்.
  • மேற்கண்ட கைமருந்துகளை செய்வதன் மூலம் காதில் உண்டாகும் இரைச்சலைக் கட்டுப்படுத்த முடியும்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios