சாப்பிட்ட பிறகும் பசி எடுப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நம் உடலுக்கு தேவையான ஆற்றலை உணவுதான் வழங்குகிறது. சாப்பிட்டு பிறகு சிலருக்கு சில மணி நேரத்திலேயே பசி எடுக்க தொடங்கும். அது சாதாரண விஷயம். ஆனால் மூச்சு முட்ட சாப்பிட்ட பிறகு மீண்டும் பசி எடுக்கிறதா? இது உண்மையில் சரியல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

புரதச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்வதும், சர்க்கரை நோய், நீரிழப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளாலும் கூட சாப்பிட்ட பிறகு பசி எடுப்பதற்கு காரணம் என்று சொல்லலாம். இதை பாலிபேஜியா (polyphagia) என்று சொல்லுவார்கள். சரி, இப்போது சாப்பிட்டு பிறகு பசி எடுப்பதற்கான பொதுவான காரணங்கள் மற்றும் அதை தடுப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சாப்பிட்ட பிறகு பசி எடுப்பதற்கான காரணங்கள் :

1. அதிகப்படியான மன அழுத்தம்

உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக கூட மன அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி பசியை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் ஏதேனும் விஷயத்திற்காக கவலைப்பட்டு மன அழுத்தம் அல்லது மன உளைச்சலுக்கு ஆளானால் முதலில் பாதிக்கப்படுவது உங்களது உணவு முறைதான். இதன் விளைவாக சாப்பிட்ட பிறகும் பசி உணர்வு ஏற்படும்.

2. கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது பொதுவானது தான். ஆனால் இந்த சமயத்தில் அடிக்கடி பசி ஏற்படுவதற்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையற்ற தன்மை தான் காரணம்.

3. தூக்கமின்மை

நீங்கள் தினமும் சரியாக தூங்கவில்லை என்றால் சாப்பிட்ட பிறகும் பசி உணர்வு ஏற்படும். ஆய்வுகள் படி, போதுமான அளவு தூக்கம் மற்றும் தரம் குறைந்த தூக்கம் உள்ளவர்களுக்கு அடிக்கடி பசி ஏற்பட்டு ஏதாவது சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

4. ஊட்டச்சத்து இல்லாமை

நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான அளவு புரதம், நார்ச்சத்து அல்லது ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இல்லையென்றால் நீங்கள் உணவு சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் பசிக்க ஆரம்பிக்கும்.

5. நீரிழப்பு

உங்களது உடல் நிரேற்றமாக இல்லை என்றால் சாப்பிட்டுப் பிறகும் கூட பசி எடுக்கும். சில சமயங்களில் தாகம் எடுத்தால் கூட சிலர் பசி தான் எடுக்கிறது என்று தவறாக எண்ணி சாப்பிடுவார்கள். எனவே நீங்கள் சாப்பிட்ட பிறகும் பசி எடுத்தால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து பாருங்கள். அது தாக உணர்வா? அல்லது பசி உணர்வா? என்று உங்களுக்கே தெரியும்.

6. கிளைசெமிக் குறியீடு உணவுகள்

உங்களது உணவில் அதிக கிளைசெமிக் குறியீடு இருந்தால் கூட சாப்பிட்ட பிறகும் பசி உணர்வை ஏற்படுத்தும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் கிளைசெமிக் குறியீடு நிறைந்த உணவுகளை சாப்பிடால் இரத்த சர்க்கரை அளவுகளில் வீழ்ச்சி மற்றும் சர்க்கரை அதிகரிப்பு ஏர்படும். இதன் காரணமாக நீங்கள் சாப்பிட்ட பிறகும் பசி உணர்வு ஏற்படும்.

7. மருந்துகளின் விளைவு

நீங்கள் சாப்பிட்ட பிறகும் பசி எடுப்பதற்கு முக்கிய காரணம் நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஸ்டெராய்டு, கருத்தடை மாத்திரைகள் போன்ற மருந்துகளும் காரணம்.

சாப்பிட்ட பிறகு ஏற்படும் பசியை தவிர்க்க :

- புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். புரதம் நீண்ட நேரம் உங்களது வயிற்றை நிரம்பி வைக்கும் உணர்வைத் தரும்.

- நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உங்களை முழுமையாக வைத்திருக்கும். மேலும் செரிமான செயல்முறையையும் உருவாக்கும். இதற்கு காய்கறிகள், பழங்கள், முல்தானிகள் மற்றும் கருப்பு வகைகளை உங்களது உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- உணவை அவசர அவசரமாக சாப்பிடாமல் மெதுவாக மென்று சாப்பிடுங்கள். அப்போதுதான் அதிகப்படியான பசி தடுக்கப்படும்.

- உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள்

- ஆரோக்கியமான உணவை மட்டுமே அதிகமாக சாப்பிடுங்கள்.

- துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இவற்றை பின்பற்றிய பிறகும் சாப்பிட்ட பிறகு மீண்டும் பசி உணர்வு ஏற்படுத்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.