Fruit Juice: குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கலாமா? வேண்டாமா?
குழந்தைகளுக்கு பழங்களை ஜூஸாக கொடுப்பதற்கு பதில் பழமாக கொடுப்பதே மிகவும் சிறந்தது மற்றும் ஆரோக்கியமானது கூட. முடிந்த வரையில் ஜூஸ் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
உணவு முறையைப் பொறுத்த வரை, சரிவிகித உணவு முறை தான் மிகவும் சிறந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் சரிவிகித உணவையே மறந்து விட்டனர் என்றால் அது மிகையாகாது. ஒரு வயதுடைய குழந்தைகளுக்கும் சரிவிகித உணவு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். அதாவது, வீட்டில் மற்றவர்கள் சாப்பிடும் அதே உணவுகளை ஒரு வயதுடைய குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். காரம் மற்றும் மசாலா போன்றவற்றை மட்டும் குழந்தையின் விருப்பத்திற்கே ஏற்ப குறைத்துக் கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு பழங்களை கொடுங்கள்
குழந்தைகளுக்கு தினந்தோறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் கொடுக்க வேண்டும். அனைத்து விதமான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் கொடுக்கலாம். குழந்தைகள் சாப்பிட வசதியாக சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, விதைகளை நீக்கி கொடுத்துப் பழக்கி விடலாம்.
குழந்தைகளுக்கு பழங்களை ஜூஸாக கொடுப்பதற்கு பதில் பழமாக கொடுப்பதே மிகவும் சிறந்தது மற்றும் ஆரோக்கியமானது கூட. முடிந்த வரையில் ஜூஸ் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். அப்படியே ஜூஸ் கொடுத்தாலும் அடிக்கடி கொடுத்துப் பழக்கி விடாமல், எப்போதாவது சிலசமயம் மட்டும் கொடுக்கலாம். பழமாகச் சாப்பிடும் போது அதிலிருந்து நமக்கு கிடைக்கும் சத்துக்கள், ஜூஸாக எடுத்துக் கொண்டால் முழுமையாக கிடைப்பதில்லை.
ஜூஸ் தயாரிப்பதற்கு பழங்களை தோல் நீக்கி, சதைப் பற்றை மட்டும் எடுப்பதால், தோல் பகுதியில் இருக்கும் நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்களை நாம் இழக்கிறோம். இதுதவிர, பழங்களை ஜூஸாக மாற்றும் போது அதில் சர்க்கரையை சேர்த்து விடுகிறோம். இது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. எனவே அனைத்து விதமான பழங்களையும் குழந்தைக்கு கொடுத்துப் பழக்கி விடுங்கள்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய வெஜிடபிள் சீஸ் தோசை!!!
ஒருவேளை உங்கள் குழந்தைக்கு குறிப்பிட்ட ஒரு பழம் பிடிக்கவில்லை என்றால், அப்பழத்தை மட்டும் வித்தியாசமான வடிவங்களில் வெட்டி, ஸ்மைலி வடிவம் போல அடுக்கி கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிட்டு விடும்.
குழந்தைகளுக்கு கீரைகள்
அனைத்து விதமான கீரைகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தினந்தோறும் கீரை கொடுக்கலாம். சைவ மற்றும் அசைவ சூப்பும் கொடுக்கலாம். சூப்பில் காய்கறி கலவை, பருப்பு மற்றும் முட்டை ஆகியவற்றைச் சேர்த்து கொடுப்பதனால், அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக மாற்ற முடியும். க்ளியர் சூப் கொடுப்பதை விடவும் இப்படி கொடுப்பது தான் மிகவும் ஆரோக்கியமானது.