Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய வெஜிடபிள் சீஸ் தோசை!!!

எளிமையான முறையில் அருமையான காய்கறி சீஸ் தோசையை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Vegetable Cheese dosa in Tamil
Author
First Published Oct 24, 2022, 12:06 AM IST

வழக்கமாக காலையில் நாம் சாப்பிடக்கூடிய தோசையை சாப்பிட்டு அலுத்து போய் விட்டதா? கொஞ்சம் டிஃபரென்ட்டான முறையில் தோசை சாப்பிட வேண்டுமா? தோசையில் என்ன டிஃபரென்ட் இருக்க போகிறது என்கிறீர்களா? ஆனியன் தோசை, ரவா தோசை, முட்டை தோசை,பொடி தோசை தெரியும். வேறு என்ன டிஃபரென்ட் ? இருக்க முடியும். 

குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுக்கிறார்களா? அப்போ இந்த மாதிரி தோசையில் காய்கறிகளை சேர்த்துக் கொடுங்கள். 
இந்த தோசையை ஒரு முறை செய்தால், இதனை அடிக்கடி செய்யுமாறு குழந்தைகள் கூறும் அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். 

இதற்கென பெரிதாக எந்த ஒரு பொருளும் தேவை இல்லை. வீட்டில் உள்ள மாவு மற்றும் காய்கறிகளை சேர்த்து ஆரோக்கியமான மற்றும் எளிமையான முறையில் அருமையான காய்கறி சீஸ் தோசையை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

சுவையான சிதம்பரம் கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்

தோசை மாவு - 2 கப்
வெங்காயம் - 1 
சீஸ்-50 கிராம் (துருவியது)
பீன்ஸ் - 10
கோஸ் - 50 கிராம்
கேரட் - 1 துருவியது 
மஞ்சள் அல்லது சிவப்பு நிற கேப்ஸிகம் - 1
பச்சை மிளகாய் - 2 
மல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் -தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் வெங்காயம், பீன்ஸ், கேப்ஸிகம் மற்றும் கோஸ் ஆகியவற்றை மிக பொடியாக நறுக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கேரட் மற்றும் சீஸை துருவி அதனையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஆரோக்கியாயமான முறையில் வீட் கார்லிக் பரோட்டா செய்யலாமா?

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெயை காய்ந்த பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

நன்றாக வதங்கிய பின்னர் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும், பின் அதனுடன் கேப்ஸிகம் மற்றும் கோஸ் சேர்த்து வதக்க வேண்டும் .பின் இதனை தோசை மாவில் சேர்த்து அதனுடன் மல்லித் தழையையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

இப்போது அடுப்பில் தோசைக்கல் வைத்து காய்ந்ததும், மாவினை தோசையாக ஊற்ற வேண்டும். பின் தோசை மேல் துருவிய சீஸ் தூவ வேண்டும். பின் சுற்றி சிறிது எண்ணெய் சேர்த்து தோசை வெந்த பின் திருப்பி போட்டு எடுக்க வேண்டும். அவ்ளோதாங்க ஆரோக்கியமான மற்றும் சுவையான வெஜிடபிள் சீஸ் தோசை ரெடி!!

Follow Us:
Download App:
  • android
  • ios