Asianet News TamilAsianet News Tamil

ஆரோக்கியாயமான முறையில் வீட் கார்லிக் பரோட்டா செய்யலாமா?

கோதுமையை பயன்படுத்தி அதனுடன் பூண்டையும் சேர்த்து ஆரோக்கியமான வீட் கார்லிக் பரோட்டா செய்து சுவைக்கலாமா? 
 

How to make Wheat Garlic Paratha in Tamil
Author
First Published Oct 22, 2022, 11:55 PM IST

வழக்கமாக நாம் பரோட்டா என்றால் மைதா மாவினை சேர்த்து தான் செய்வோம். இன்று நாம் சற்று மாற்றமாக கோதுமையை பயன்படுத்தி அதனுடன் பூண்டையும் சேர்த்து ஆரோக்கியமான வீட் கார்லிக் பரோட்டா செய்து சுவைக்கலாமா? 

முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா , வீச்சு பரோட்டா , சில்லி பரோட்டா, வெஜ் பரோட்டா என்று பல வகையயன பரோட்டாக்களை நாம் சுவைத்து இருப்போம். இன்று நாம் வீட் கார்லிக் பரோட்டாவை காண உள்ளோம் .இதனை மிக குறைந்த நேரத்தில் , எளிமையாக செய்து விடலாம். இதன் சுவையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த ரெசிபி பிடிக்கும் வகையில் நிச்சசயமாக இருக்கும். வாருங்கள் !இந்த வீட் பரோட்டா வை எப்படி வீட்டிலேயே செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

வீட் கார்லிக் பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்:

குஜராத் செல்லாமலே வீட்டில் இருந்தே குஜராத் ஸ்பெஷல் தோக்ளா செய்வோமா?

கோதுமை 1 கப்
பூண்டு 10 பல்
மல்லி தழை 
பட்டர் 1 ஸ்பூன் 
தேவையான அளவு நெய்

செய்முறை:

முதலில் பூண்டினை தோல் உரித்து மிக பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி,ஒரு கப் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன்  சிறிது உருகிய பட்டர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின் இதனுடன் நறுக்கி வைத்துள்ள பூண்டு மற்றும் மல்லி தழையை சேர்த்துக் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். 

சுவையான சுரைக்காய் போளி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம் வாங்க!

சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சுமார் 1 மணி நேரம் வரை ஊற விட வேண்டும். மாவை ஒரே மாதிரியான உருண்டைகளாக உருட்டி கொண்டு சப்பாத்தி பலகையில் எண்ணெய் தடவி திரட்டி விட வேண்டும். அதன் மீது சிறிது எண்ணெய் தடவி கொஞ்சம் கோதுமை மாவை தூவி, இரு பக்கமும் பிடித்துக் கொண்டு விசிறி போல் மடித்து வட்டமாக சுருட்ட வேண்டும்.

பின் இதனை உள்ளங்கையில் வைத்து அழுத்தி சற்று கனமான பரோட்டாவாக திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதே போன்று அனைத்து உருண்டைகளையும் திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக்கு கல்லை வைத்து , தோசைக் கல் சூடான பின்பு சிறிது நெய் விட்டு, திரட்டி வைத்துள்ள பரோட்டாவை போட்டு ஒரு புறம் வெந்த பின் திருப்பி போட்டு மறுபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து விட வேண்டும்.

அவ்ளோதான் சுவையான மற்றும் சத்தான வீட் கார்லிக் பரோட்டா ரெடி!!!
 

Follow Us:
Download App:
  • android
  • ios