Asianet News TamilAsianet News Tamil

சமையல் எண்ணெய்யால் நீரிழிவு நோய் ஏற்படுமா?

சமையல் எண்ணெய் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் நீரிழிவு நோய் பிரச்னையும் ஏற்படுவதாக பலரும் கருதுகின்றனர். இதுகுறித்த உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம்.
 

Can cooking oil cause diabetes
Author
First Published Dec 30, 2022, 1:30 PM IST

பெயர்கள் மாறினாலும், சேர்க்கை மாறுபட்டாலும் எல்லாவிதமான சமையல் எண்ணெய்களும் ஒன்றுதான். எந்தவொரு எண்ணெய்யும் மாறுபட்டது கிடையாது. பன்றிக்கொழுப்பு போன்ற விலங்கு மூலங்களிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவை பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. அதற்கு பதிலாக ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் அல்லது எள் எண்ணெய் எடுக்க வேண்டும். இவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சமையல் எண்ணெய்களில் அதிக நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருப்பதால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை நீரிழிவு உட்பட பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர்.

சில வகை எண்ணெயில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையில் நன்மைகளை ஏற்படுத்துகின்றன. இருதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவி செய்கிறது. அதனால்தான் யாரும் எண்ணெய் இல்லாத உணவைச் சாப்பிடச் சொல்வதில்லை. ஆனால் சமையல் எண்ணெய்களை வாங்கும்போது அவை ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா? என்பதை ஆராய்ந்து பார்த்து வாங்குவது மிகவும் நல்லது.

சமையல் எண்ணெய் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது என்பது முற்றிலும் தவறான வாதம் என நிபுணர்கள் கூறுகின்றனர். என்னதான் ஆரோக்கியம் மிகுந்த  எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தினாலும், வாழ்க்கை முறை தவறினால்  அல்லது உடலுழைப்பு இல்லாமல் போனால் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதிக இறைச்சி சாப்பிடுவதும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் சர்க்கரை நோய்க்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

சில புள்ளிவிவரங்களின்படி, இறைச்சி மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே சமையல் எண்ணெய் மட்டுமே நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. சமையல் எண்ணெயால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த எண்ணெய் சிறந்தது என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவரை அணுகுவது நல்லது.

உண்மையில், டைப் 2 நீரிழிவு நோய் பெரும்பாலும் நாம் உண்ணும் உணவின் மூலம் ஏற்படுகிறது. குறிப்பாக நொறுக்குத் தீனிகள், சிப்ஸ், பொரியல் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதால் இந்த பாதிப்பு வருகிறது. இந்த வகை உணவுகள் சர்க்கரை நோயின் அபாயத்தை 70 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சர்க்கரை நோய் வராமல் தடுக்க குறிப்பிட்ட உணவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை அதிக அளவில் உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது இறுதியில் ஒரு நபரை டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளாக்குகிறது. டிரான்ஸ் அல்லது சாச்சுரேட்டட் கொழுப்பைத் தவிர்க்க உங்கள் உணவில் ஆலிவ் மற்றும் கனோலா எண்ணெய்களை சேர்ப்பது ஓரளவுக்கு பலன் தரும்.

வீடுகளில் காலண்டர் மாட்டுவதற்கும் வாஸ்து பலன்கள் உண்டு- தெரிஞ்சுக்கோங்க..!!

மிகவும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உணவும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. வெள்ளை மாவு, வெள்ளை சர்க்கரை, வெள்ளை அரிசி போன்ற உணவுகள் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். மேலும், இந்த உணவுகள் நீண்ட காலத்திற்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை எண்ணெயுடன் கலப்பது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். அதனால்தான் நீரிழிவு நோயைத் தவிர்க்க இந்த வகையான அதிக பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சிவப்பு இறைச்சி அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகமாக சாப்பிடுவதும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். பொதுவாக இந்த வகையான உணவுப் பொருட்கள் வகை 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கின்றன. எனவே பேக்கன், ஹாட் டாக், டெலி மீட் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதை குறைக்கவும். ஏனெனில் அவற்றில் சோடியம் மற்றும் நைட்ரேட்டுகள் அதிகம். இது மிகவும் தீங்கு விளைவிக்கும் பொருட்களாகும். குறிப்பாக அவை எண்ணெயுடன் கலந்தால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகும் என மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios