மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க வாழைப்பழம் எவ்வாறு உதவுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த காலத்துல மனஅழுத்தம் என்பது எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உண்மையில் மன அழுத்தம் படிப்படியாக அதிகரித்து பல உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகிக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கவலைப்படுபவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு பழம் உள்ளது. அது வேற ஏதுமில்லை "வாழைப்பழம்" தான்.

ஆம், தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உங்களது டென்ஷன் பறந்து போகிறது தெரியுமா இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. வாழைப்பழம் சாப்பிடுவதால் மன ஆரோக்கியம் மேம்படும் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம்..

நிபுணர்களின் கூற்றுப்படி, வாழைப்பழம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான இயற்கையான வழி. நீங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால், வாழைப்பழம் சாப்பிடுங்கள். உண்மையில், வாழைப்பழத்தில் வைட்டமின் B6, டிரிப்டோபான் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கின்றன, அதாவது உடலில் மனநிலையைக் கட்டுப்படுத்தும் நியூரோட்ரான்ஸ்மிட்டர்.

போதுமான அளவு செரோடோனின் இருக்கும்போது, மன அமைதி மற்றும் மகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில், வாழைப்பழம் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

வாழைப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் துத்தநாகமும் உள்ளன. இவை தசைகளை தளர்த்தவும், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகின்றன, இது ஒட்டுமொத்த மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

இதனுடன், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும், குறைந்தது 8 மணி நேரம் நன்றாக தூங்கவும். உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்யுங்கள்.