இயற்கையான வழியில் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சூப்பரான தேநீர் பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடல் பருமனால் படாதபாடு அனுபவிக்கிறார்கள். உலக அளவில் பெரும்பாலானோர் அதிக உடல் எடை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். உடல் எடை அதிகரிப்பால் பலவித நோய்களும் நம்மை தாக்குகின்றன. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு முறை காரணமாக உடல் எடை அதிகரிக்கின்றது. குறிப்பாக இடுப்பு மற்றும் தொப்பை பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து விட்டால் அதை கரைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை செய்கிறார்கள் சிலர் ஜிம்முக்கு செல்கிறார்கள். இன்னும் சிலர் கடினமான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் கருப்பு மிளகு டீ குடிப்பதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைத்துவிடலாம் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அப்படி உடல் எடையை குறைக்க கருப்பு மிளகு டீ எவ்வாறு உதவுகிறது? அதை தயாரிப்பது எப்படி என்று இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளலாம்.

கருப்பு மிளகு :

கருப்பு மிளகு (Black pepper) எல்லோருடைய கிச்சனிலும் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்றாகும். அதன் காரமான சுவை மற்றும் நறுமணத்திற்காக இது சைவம் மற்றும் அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மிளகில் நிறைந்துள்ள தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கருப்பு மிளகு தேநீர் என்பது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு சூப்பரான மூலிகை கலவையாகும்.

கருப்பு மிளகு தேநீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

கருப்பு மிளகு தூள் - 1 ஸ்பூன் 

தேன் - 1 ஸ்பூன் 

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 

நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன் 

தண்ணீர் - 2 கப்

செய்முறை :

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இப்போது நறுக்கி இஞ்சி கருப்பு மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். அடுத்ததாக அதை வடிகட்டி சுவைக்காக தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் டேஸ்டியான கருப்பு மிளகு தேநீர் தயார்.

கருப்பு மிளகு தேநீர் ஆரோக்கிய நன்மைகள் :

- கருப்பு மிளகில் இருக்கும் சில கலவைகள் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை துரித ப்படுத்த உதவுகிறது என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

- எடை இழப்புக்கு உதவும் சில மசாலா பொருட்களில் கருப்பு மிளகும் அடங்கும். இது உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது.

- கருப்பு மிளகில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

- கருப்பு மிளகு டீயானது சளி மற்றும் இருமலை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கருப்பு மிளகு உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகின்றன மற்றும் பல உடல்நிலை பிரச்சினைகள் வருவதையும் தடுக்கின்றன.

- கருப்பு மிளகு தேநீர் குடித்தால் பதட்டம், மன அழுத்தத்தை குறைத்து மனதை அமைதியாக வைக்க உதவுகிறது.

- கருப்பு மிளகு தேநீர் குடித்தால் உடலில் இருந்து அனைத்து நச்சுக்களும் வெளியேற்றப்படுகின்றன. மேலும் உடலின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்தும்.

- கருப்பு மிளகில் வைட்டமின் கே, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகின்றன. கருப்பு மிளகு தேநீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

- கருப்பு மிளகு தேநீர் குடித்தால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

நினைவில் கொள் :

கருப்பு மிளகு தேநீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும் அதை அதிகமாக குடிக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு இந்த தேநீரை குடிப்பது நல்லது.