- Home
- Lifestyle
- Chapati for Weight Loss : சப்பாத்தியை இப்படி சாப்பிடுங்க; அப்ப தான் எடை குறையும்! இல்லனா எகிறும்
Chapati for Weight Loss : சப்பாத்தியை இப்படி சாப்பிடுங்க; அப்ப தான் எடை குறையும்! இல்லனா எகிறும்
உடல் எடையை சுலபமாக குறைக்க சப்பாத்தியை எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.

Chapati for Weight Loss
உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை செய்கிறார்கள். எடை இழப்புக்கு உடற்பயிற்சி மற்றும் உணவு இவை இரண்டும் மிகவும் அவசியம். மேலும் எடையை குறைக்க கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும். அந்தவகையில், உடல் எடையை குறைக்க சப்பாத்தி பெரிதும் உதவுகிறது. ஆனாலும், சாப்பாத்தி சாப்பிட்டாலும் எல்லாருக்கும் எடை குறைவதில்லை. ஆகவே, சாப்பாதியை எப்படி, எவ்வளவு சாப்பிட்டால் உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும் என்று இந்த பதிவில் காணலாம்.
சப்பாத்தியின் ஆரோக்கிய நன்மைகள் :
- சப்பாத்தி, அதுவும் குறிப்பாக கோதுமை மாவில் செய்யப்படும் சாப்பாதியில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.
- இதில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கும். இதனால் மலச்சிக்கல் வருவது தடுக்கப்படும். மேலும் வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிரப்பி வைக்கும் இதனால் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படும்.
- வெள்ளை அரிசியை காட்டிலும் கோதுமையில் கிளைசெமிக் குறியீடு ரொம்பவே காமி. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக உயர்த்தும். எனவே சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பு நினைப்பவர்களுக்கு கோதுமை சப்பாத்தி பெஸ்ட் சாய்ஸ்
சப்பாத்தியை இப்படி சாப்பிட்டாதீங்க! எடை அதிகரிக்கும்..
சில சமயங்களில் சப்பாத்தி சாப்பிட்டாலும் எடை அதிகரிக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் மாவு பிசையும் போது மற்றும் சப்பாத்தியை சுடும் போது எண்ணெய் அல்லது நெய் சேர்க்கிறோம். இதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. இரண்டு சப்பாத்தியில் சுமார் 140 கலோரிகள் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அதில் எண்ணெய் அல்லது நெய் சேர்க்கும் போது அதன் கலோரி அளவானது ரெண்டு மடங்காக அதிகரிக்கும். சப்பாத்தியில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருந்தாலும், அது உங்களது எடை இழப்பு பயணத்தை பாதிக்கும்.
எடையை குறைக்க சப்பாத்தியை எப்படி சாப்பிடணும்?
- சப்பாத்தி சுடும் போது அதில் நெய் அல்லது எண்ணெய் சேர்க்காமல் வெறும் கல்லில் மட்டும் சுடவும். இதனால் அதன் கலோரி அளவு கட்டுக்குள் இருக்கும்.
- சப்பாத்தி ஆரோக்கியமானது என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். குறிப்பாக எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் ஒரு வேளைக்கு அதுவும் இரண்டு சப்பாத்தி மட்டுமே சாப்பிட வேண்டும்.
- அதுபோல சப்பாத்தியுடன் வறுத்த காய்கறிகள் போன்ற அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக புரதம் நிறைந்த பருப்பு, அவித்த காய்கறிகள் அல்லது குறைந்த கொழுப்புள்ள பன்னீர் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள முறைப்படி சப்பாத்தியை சாப்பிட்டால் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம். ஆகவே உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் ஒரு முறை இப்படி சப்பாத்தி சுட்டு சாப்பிட்டு பாருங்க.