Asianet News TamilAsianet News Tamil

1973 - 2018க்கு இடையில் சராசரி விந்தணு எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.. ஆய்வில் பகீர் தகவல்..

1973 மற்றும் 2018 க்கு இடையில் சராசரி விந்தணு எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

Average Sperm Count More Than Halved Between 1973 and 2018, Finds Study Rya
Author
First Published Apr 4, 2024, 12:09 PM IST

1973 மற்றும் 2018 க்கு இடையில் சராசரி விந்தணுக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மனித இனப்பெருக்கம் புதுப்பிப்பு இதழில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது சராசரி மனித விந்தணுக்களின் செறிவு 51.6 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும், மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை 62.3 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் 1973 மற்றும் 2018 க்கு இடையில் வெளியிடப்பட்ட 223 ஆவணங்களின் பகுப்பாய்வை மேற்கொண்ட பின்னர் இந்த ஆய்வு இதழில் வெளியிடப்பட்டது. 53 நாடுகளில் 57,000 ஆண்களின் விந்தணு மாதிரிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது..

மனித விந்தணுக்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதற்கு பல்வேறு வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

ஜாக்கிரதை.. ஒருமுறை சமைத்த எண்ணெய்யை அடிக்கடி பயன்படுத்தினால் இந்த பாதிப்பு ஏற்படலாம்..

மனித விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கு என்ன காரணம்?

புகைபிடித்தல்: புகையிலை பயன்பாடு விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதுடன் தொடர்புடையது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..

உடல் பருமன்: இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலரும் ஆரோக்கியமற்ற உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். இது உடல் பருமன் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மைக்கு பங்களிக்கும், இது விந்தணு எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிக்கலாம்.

ஊட்டச்சத்து குறைபாடுகள்: சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், துத்தநாகம் மற்றும் வைட்டமின் டி போன்றவற்றின் குறைபாடுகள் விந்தணு உற்பத்தி மற்றும் தரத்தை பாதிக்கலாம்.

மன அழுத்தம்: நாள்பட்ட மன அழுத்தம் விந்தணு உற்பத்தியை பாதிக்கும் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்.

மது மற்றும் போதைப்பொருள் : அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் சில மருந்துகளின் பயன்பாடு விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை குறைக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரசாயனங்கள் : பிளாஸ்டிக், பூச்சிக்கொல்லிகள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் இரசாயனங்கள் உடலின் ஹார்மோன் அமைப்பில் தலையிடலாம், இது விந்தணு எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதற்கு வழிவகுக்கும்.

காற்று மாசுபாடு: சில காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே போல் அதிக வெப்பமும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம்.

மரபணு காரணிகள்: குறைந்த விந்தணு எண்ணிக்கையில் சில சந்தர்ப்பங்களில் மரபணு காரணிகளும் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம்.

உடல் செயல்பாடு இல்லாமை: உட்கார்ந்த வாழ்க்கை முறையானது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதோடு தொடர்புடையது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Watermelon : எச்சரிக்கை.. தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க.. ஏன் தெரியுமா..?

Follow Us:
Download App:
  • android
  • ios