Watermelon : எச்சரிக்கை.. தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க.. ஏன் தெரியுமா..?
தர்பூசணியை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்று இங்கு தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
கோடை காலத்தில் பல்வேறு வகையான பழங்கள் கடைகளில் விற்பனை ஆகும். அத்தகைய சூழ்நிலையில், நாம் அவற்றை கடைகளில் இருந்து வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவோம். இருப்பினும், ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட கூடாத சில பழங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா.? அதில் ஒன்று தர்பூசணி.
கோடைக்காலத்தில் குளிர்ச்சியான தர்பூசணியை சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது..? 90% நீர் நிறைந்த இந்த பழம் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் சாப்பிடுவது மிகவும் முக்கியம். இல்லையெனில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதன் சுவை மற்றும் தரம் இரண்டையும் கெடுத்துவிடும். இது தவிர தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைப்பதும் விஷமாக செயல்படுமாம். இப்போது தர்பூசணியை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்று இங்கு தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
தர்பூசணியை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது?
தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைப்பதன் மூலம், அதில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மேலும், தர்பூசணியை வெட்டி ஃப்ரிட்ஜில் வைப்பதால், அது விஷமாக மாறும் அபாயம் உள்ளது. அதுபோல, வெட்டப்பட்ட தர்பூசணியில் பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. அவை பொதுவாக நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
இதையும் படிங்க: Watermelon : சுவையான நல்ல தர்பூசணி வாங்க பெஸ்ட் டிப்ஸ் இது தாங்க!!
தர்பூசணியை இப்படி சாப்பிடுங்கள்:
ஆய்வின்படி, தர்பூசணிகளை அறை வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது. இதனால் அதன் நன்மைகளை முழுமையாக அனுபவிக்க முடியும். இது தவிர, தர்பூசணியை இரவில் சாப்பிடக்கூடாது. அதை எப்போதும் பகலில் மட்டும் தான் சாப்பிட வேண்டும். மேலும் இதை சாப்பிட்ட பிறகு தண்ணீர், பால், லஸ்ஸி, குளிர் பானங்கள் போன்றவற்றை உட்கொள்ளக் கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்
தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
எடை இழப்பு: தர்பூசணி மிகவும் குறைந்த கலோரிகள் கொண்ட பழம். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு ஆரோக்கியமான தேர்வாக கருதப்படுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: தர்பூசணியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு நல்லது. இதை சாப்பிட்ட பிறகும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கிறது.
இதய ஆரோக்கியம்: தர்பூசணியில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறையை நிறைவு செய்கிறது: கோடையில் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் முக்கியம் மற்றும் தர்பூசணி தண்ணீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D