Watermelon : சுவையான நல்ல தர்பூசணி வாங்க பெஸ்ட் டிப்ஸ் இது தாங்க!!
தர்பூசணியை வெட்டி பார்க்காமல் அது நல்ல பழமா..இல்லையா என்பதை கண்டுபிடிக்க சில வழிகள் இங்கே உள்ளன. அவை..
கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது தர்பூசணி தான். இந்த பருவ காலத்தில் சாலைகளில் எல்லா இடங்களிலும் தர்பூசணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும். அடிக்கும் வெயிலில் இந்த பழம் சாப்பிடுவது நம் உடலுக்கு இதமாக இருக்கும். மேலும் இந்த பழம் உடல் நலத்திற்கு நல்லது என்று நம் அனைவருக்கும் தெரிந்ததே. இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால், அவை உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதுகாக்கிறது. அதிலும் குறிப்பாக, இதில் இருக்கும் நீர்ச்சத்து கோடையில் நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம்.
இப்படி பல நன்மைகள் நிறைந்த இந்த பழமானது சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் அவற்றை வாங்குவது மிகவும் கடினம். ஏனெனில், சந்தையில் டஜன் கணக்கில் தர்பூசணிகள் இருக்கும். ஆனால், அதில் ஒரு நல்ல பழத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது பலருக்கு ஒரு சவாலான பணியாகத் தான் இருக்கிறது. காரணம், சந்தையில் வாங்கும் போது வெளி தோற்றத்திற்கு இது பார்ப்பதற்கு நன்றாகத் தெரிந்தாலும், வீட்டுக்கு வந்து வெட்டும்போது தான் தெரியும் உள்ளே சிவப்பாக இல்லை என்று.
இதனால், பணமும் வீண், அதை தூக்கி எறிந்துவிடுவோம். உங்களுக்கு தெரியுமா..தர்பூசணி பழத்தை வெட்டாமல் பழுத்திருக்கிறதா..இல்லையா என்பதை நாம் சில குறிப்புகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.. இப்போது அதைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
தர்பூசணியை வெட்டாமல் நல்ல பழம் என்று கண்டுபிடிக்க வழிகள்:
எடை: பெரும்பாலான மக்கள் பளபளப்பான மற்றும் களங்கமற்ற தர்பூசணி பழத்தை தான் வாங்க விரும்புகிறார்கள். ஆனால், இப்படி வாங்கும் தர்பூசணியானது, உள்ளே பச்சையாகவும் மந்தமாகவும் இருக்கும். எனவே, வாங்கும் முன் தர்பூசணியில் மஞ்சள் கறை படிந்திருந்தால், அது பழுத்தது என்று புரிந்து கொள்ளுங்கள். நம் அனைவருக்கும் தெரியும், தர்பூசணியில் 92% தண்ணீர் உள்ளது. இதனால் இதன் எடை அதிகமாகவே இருக்கும். ஒருவேளை, தர்பூசணியில் தண்ணீர் குறைவாக இருந்தால், தர்பூசணி இலகுவாக இருக்கும். எனவே, இந்த சூழ்நிலையில் நீங்கள் மஞ்சள் புள்ளிகள் கொண்ட கனமான தர்பூசணியை வாங்குவது தான் சிறந்த தேர்வாகும். அதுமட்டுமின்றி, தண்ணீர் நிறைந்து, இப்படி கனமாக இருக்கும் பழம் தான் முறையாகப் பழுத்தது என்பதன் அறிகுறியாகும்.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்
வடிவம்: தர்ப்பூசணி பழத்தை வாங்கும் முன் அதன் வடிவத்தை பார்த்து வாங்குங்கள். எப்படியெனில் வட்டமான அல்லது ஓவல் வடிவத்தில் இருக்கும் தர்பூசணி நல்லது. அதேசமயம், ஒழுங்கில்லாமல் இருக்கும் பழமானது நல்லதல்ல. எண்ணி, அது எல்லா இடங்களிலும் சீராகப் பழுத்திருக்காது.
நிறங்கள்: தர்பூசணியை நீங்கள் வயலுக்கு சென்று நேரடியாக வாங்குகிறீர்கள் என்றால், பழத்தின் அடிப்பகுதி மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கிறதா என்று பாருங்கள். ஒருவேளை அப்படி இருந்தால் அந்த பழத்தில் சரியான அளவில் இனிப்பு மற்றும் இருக்கும்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளின் கவனத்திற்கு: கோடையில் நீங்க ஆரோக்கியமாக இருக்க இந்த பழத்தை கண்டிப்பாக சாப்பிடுங்க..!!
தர்பூசணி காம்பு: தர்பூசணி வாங்கு முன் அதன் காம்பு பார்த்து வாங்குங்கள். எப்படியெனில், தர்பூசணியின் காம்பின் நிறம் பச்சையாக இருந்தால் அது இன்னும் பழுக்கவில்லை என அர்த்தம். ஒருவேளை அதன் காம்பு கொஞ்சமா காய்ந்து பழுப்பு நிறத்தில் இருந்தால், அது நல்ல பழுத்த பழம் என்பதற்கான அறிகுறியாகும்.
சத்தம்: நீங்கள் தர்பூசணி வாங்கும் முன் அதை தட்டி பார்த்து வாங்குவது நல்லது. அப்படி நீங்கள் தட்டி பார்க்கும் போது அதன் உள்ளே காலியாக இருப்பது போல் சத்தம் வந்தால், அது நல்ல பழுத்த பழம் என்று அர்த்தம். இதுவே, தட்டும் போது சத்தம் மந்தமான வந்தால், அது இன்னும் பழுக்கவில்லை என்று அர்த்தம்.
நினைவில் கொள்: நீங்கள் வாங்கும் தர்பூசணி பளபளப்பாக இருந்தால் அதை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், சரியாக முற்றிலும் பழுக்கும் நிலைக்கு வராத பழமே பளபளப்பாக இருக்கும். அதுபோலவே, அடிப்பட்ட தர்பூசணியை ஒருபோதும் வாங்க வேண்டாம். காரணம் அதன் ஒரு பகுதி அழுகி இருந்தால் கூட, உள்ளே நன்றாக இருக்காது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D