Osteoporosis: எலும்புத் தேய்மான பிரச்னையா? இந்த பானங்களை ஒதுக்கி வையுங்கள்!
சில பானங்கள் எலும்புத் தேய்மானத்தை மேலும் அதிகரிக்கும். ஆகையால், அந்த பானங்களை தவிர்த்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்.
எலும்பு பலவீனமடைந்து உடைதலுக்கு வழிவகுக்கும் நிலைக்குப் பெயர் தான் ஆஸ்டியோபோரோசிஸ். இதனை எலும்புத் தேய்மானம் என்றும் கூறுவர். ஆய்வு முடிவுகளை பொறுத்தவரையில் 50% பெண்களும், 25% ஆண்களும் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த பிரச்னையால் அவதிப்படுகின்றனர். சில பானங்கள் எலும்புத் தேய்மானத்தை மேலும் அதிகரிக்கும். ஆகையால், அந்த பானங்களை தவிர்த்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்.
ஆல்கஹால்
அதிக அளவில் ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தால் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை அதிகரிக்கிறது. ஒரு வாரத்தில் பெண்கள் 8 கிளாஸ்கள் மற்றும் ஆண்கள் 15 கிளாஸ்கள் வரை மட்டுமே ஆல்கஹால் எடுத்துக் கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வதால் கால்சியம் குறைபாடு ஏற்படும். இதனால் வைட்டமின் டி உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆல்கஹாலை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொண்டால் அது ஆஸ்டியோபோரோசிஸ் நிலையை மிகவும் மோசமாக்கி விடுகிறது. பெண்கள் அதிக ஆல்கஹால் எடுத்துக் கொள்வதால் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து, மாதவிடாயும் தாமதமாக வருகிறது.
சோடா
கஃபைன் மற்றும் சாஃப்ட் ட்ரிங்குகளில் போஸ்போரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம், நமது உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதற்கு தடையாக அமைந்து, எலும்புத் தேய்மானத்தை மேலும் அதிகரிக்குகிறது. தினந்தோறும் சோடா குடிப்பவர்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம் எனத் தெரிவித்துள்ளது, 2020 ஆம் ஆண்டு நியூட்ரியன்ஸ் இதழில் வெளியான ஆய்வு முடிவுகள்.
Protein: சைவப் பிரியர்களுக்கு புரதச்சத்தை அளிக்கும் உணவுகள் இவைதான்!
செறிவூட்டப்பட்ட பால்
செறிவூட்டப்படாத பாலில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் முழுமையாக கிடைக்காது. ஆகையால், இயற்கையாகவே சத்துக்கள் நிறைந்துள்ள பாலை குடிப்பது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை வராமல் தடுக்கிறது. அதேநேரம் செயற்கையாக செறிவூட்டப்பட்ட பாலில், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களும் கலந்திருப்பதால் அவை எலும்புத் தேய்மானம் தவிர்துத, பிற பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது.
Mudakathan Spinach: மூட்டு வலியை உடனே போக்கும் இந்த தோசையை இன்றே செய்து சாப்பிடுங்கள்!
இனிப்பு கலந்த ஜூஸ்
இனிப்பு கலந்த ஜூஸ் குடிப்பதால், எலும்பு ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும் என்கிறது 2020 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை முடிவுகள். இதுதவிர, சர்க்கரையை அதிகளவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு எலும்புத் தேய்மான பிரச்னைகள் ஏற்படுவதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரையின் அளவைக் குறைப்பதால், சிறுநீர் வழியாக கால்சியம் மற்றும் மக்னீசியம் வெளியேறாமல் தடுக்கப்படுகிறது.
மேற்கண்ட பானங்களை தவிர்த்து, கால்சியம் மற்றும் எலும்புகளை வலுவாக்கக் கூடிய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை, தினந்தோறும் டயட்டில் எடுத்துக் கொள்வது மூட்டுக்களை உறுதியாக்குகிறது. சரியான உணவுகளுடன் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை செய்வதால், எலும்பு தேய்மானத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதேநேரம் சில பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்வதால், அது எலும்புத் தேய்மானத்தை மேலும் அதிகரிக்கிறது. ஆகவே நிபுணர்களின் அறிவுரைப்படி, முறையான பயிற்சிகளை மேற்கொள்வது தான் மிகச் சிறந்தது.