Mudakathan Spinach: மூட்டு வலியை உடனே போக்கும் இந்த தோசையை இன்றே செய்து சாப்பிடுங்கள்!
உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் முடக்கத்தான் கீரையில் தோசை எப்படி செய்ய வேண்டும் என காணலாம்.
வயதாகி விட்டால் பலருக்கும் கை, கால் வலி மற்றும் மூட்டு வலி ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், இந்த வலிகளை வெகு விரைவாக குணப்படுத்த முடியும். அதற்கு, நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அரும்பெரும் மூலிகைகள் தான் காரணம். நீங்கள் மூட்டு வலி அல்லது உடல் வலியால் அவதிப்பட்டால், முடக்கத்தான் கீரை சாப்பிடுவது மிகச் சிறந்த தீர்வைத் தரும். மேலும், இந்த முடகத்தான் கீரையில் தோசை செய்து சாப்பிட்டால் அது சுவையாகவும் இருக்கும்; உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். இப்போது முடக்கத்தான் கீரையில் தோசை எப்படி செய்ய வேண்டும் என காணலாம்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை – 2 கப்
உளுந்து – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
புழுங்கல் அரிசி – 1 கப்
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
Protein: சைவப் பிரியர்களுக்கு புரதச்சத்தை அளிக்கும் உணவுகள் இவைதான்!
செய்முறை
முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக ஊறிய பின், கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். இவற்றை அரைக்கும் போதே, முடக்கத்தான் கீரையையும் நன்றாக சுத்தம் செய்து, மாவுடன் சேர்த்து, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்க வேண்டும். இதனை ஏறக்குறைய 7 மணி நேரம் புளிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
Sleeping: மதிய உணவுக்குப் பின் தூங்குபவரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
தயாரிக்கப்பட்ட மாவு தோசைக்குத் தயாரானதும், தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். இந்த அருமையான தோசையோடு பூண்டு மிளகாய்ப் பொடி சேர்த்து சுவைத்து சாப்பிட்டால் ஆரோக்கியப் பலன்களை பெறலாம். அதிலும் கை, கால் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த முடக்கத்தான் கீரை தோசையை செய்து சாப்பிட்டால், வலி உடனே பஞ்சாய்ப் பறந்து விடும்.