Protein: சைவப் பிரியர்களுக்கு புரதச்சத்தை அளிக்கும் உணவுகள் இவைதான்!
சைவ உணவுகளிலும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் அதிகம் உள்ளது. சைவ உணவுப் பழக்கம் உடையவர்கள் புரதச் சத்தைப் பெறுவதற்கு ஏற்ற உணவுகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
நமது உடல் தசைகளுக்குத் தேவையான சத்துக்களில் மிக முக்கியமாக ஒன்று தான் புரதச்சத்து. சைவ உணவுகளை விடவும், அசைவ உணவுகளான கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றில் புரதச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. ஆனால், சைவ உணவுகளிலும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் அதிகம் உள்ளது. சைவ உணவுப் பழக்கம் உடையவர்கள் புரதச் சத்தைப் பெறுவதற்கு ஏற்ற உணவுகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
சைவ உணவு முறையில் புரதச்சத்து
சைவ உணவுப்பழக்கம் உடையவர்கள் அன்றாடம் சில புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதனால், புரதச்சத்துப் பற்றாக்குறையில் இருந்து தப்பிக்க வழியுண்டு. தோஃபு பன்னீர், டிம்பா மற்றும் எடமே போன்றவை சோயா பீன்ஸ்களில் இருந்து எடுக்கப்படுகின்றது. இவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி சாப்பிட்டு வந்தால் ஒரு நாளைக்குத் தேவையான புரதச்சத்தை நம்மால் மிக எளிதாக பெற முடியும்.
Protein Powder : பாடி பில்டர்களே உஷார்: புரோட்டீன் பவுடரால் அதிக ஆபத்து!
பச்சைப் பட்டாணி
பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிகளவில் புரதச்சத்து கிடைக்கும். இதனோடு, சோயா பால் சாப்பிட்டு வந்தால் தசைகள் வலுவாகும். ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்பவர்கள் அதிகளவில் புரதச்சத்தைப் பெறுவதற்கு, ஓட்ஸ்-ஐப் பாலில் கலந்து காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிடலாம். இதனுடன் முளைகட்டிய பயிர், சிறுதானியங்கள் மற்றும் கோதுமைக் களி ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.
உடல் ஒல்லியாக இருப்பவர்கள், தங்களின் அன்றாட உணவில் அதிகளவில் புரதத்தை சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். உடல் தசைகள் அனைத்தும் வலுவடைய புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், கீரை, காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்வது நல்லது.