ஆச்சரியம்! ஊஞ்சல் ஆடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? மிஸ் பண்ணிடாதீங்க..!!
ஊஞ்சல் ஆடுவது எதற்காக என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளுங்கள்..
ஊஞ்சல் ஆடுவது என்பது எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆடுவது வழக்கம். ஆனால் தற்போது அது காணாமல் போய்விட்டது. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதால்தான் கோயில்களில் இறைவனை இன்றும் ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர்.
இதையும் படிங்க: Nails Biting : நீங்கள் அடிக்கடி நகம் கடிப்பீர்களா? இது ஆபத்தான பழக்கம்...ஜாக்கிரதை..!!
ஊஞ்சல் ஆடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- ஊஞ்சல் ஆடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் தற்போது வீடுகளில் ஊஞ்சல் அமைக்கிறார்கள். மேலும் இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை ஆகிறது.
- ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களை கொண்டுவரும்.
- மேலும் மகிழ்ச்சி பெருகும், எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்கள் தோன்றும்.
- திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ நடத்தப்படுகிறது.
- ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் அடைகிறது.
- ஊஞ்சல் ஆடும் போது முதுகுத்தண்டுக்கு இரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. இன்றைய பெண்கள் கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து கொண்டு வேளை பார்க்கிறார்கள். இதனால் முதுகுத்தண்டு வளைந்துப் போகும். எனவே, இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
- தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரும். ஏனெனில், மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி இரத்தத்தை சுத்திகரிக்கும். இதுஇதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். எனவே, தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் வராது.
- மேலும் ஊஞ்சல் ஆடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு இரத்தத்தை சீராக செல்ல உதவுகிறது.
- சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது மிகவும் நல்லது. ஏனெனில், இது உணவு நன்கு செரிக்க உதவுகிறது.
- நீங்கள் கோபமாக இருந்தால் ஊஞ்சல் ஆடினால் உங்கள் கோபம் தணியும்.
- நீங்கள் வெளியில் அலைந்துவிட்டு வீடிற்கு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
- பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி இருக்கும்.
- அக்காலத்தில், சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
- நம் இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று ஆகும்
- ஊஞ்சல் ஒரு தெய்வீக ஆசனம் ஆகும். எனவே, வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.
இதையும் படிங்க: குழந்தைகளில் அதிகரிக்கும் டைப் 1 நீரிழிவு நோய்: காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?