கண்டவுடன் காதல் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?

பார்த்தவுடனே சிலரை பிடிப்பதற்கான முக்கிய காரணம்  உளவியல் என  ஆய்வுகள் கூறுகின்றன. இதையும் மீறி ஒரு சில காரணங்களும் உண்டு.  அது குறித்து விரிவாக பார்க்கலாம். 
 

There are many reasons for finding a person attractive in a first meet list given

ஒரு சிலரை நாம் பார்த்த உடனே பிடித்துவிடும்.  இதற்கென பெரிய காரணங்கள் எதுவும் இருக்காது.  காரணத்தை யோசித்தாலும் அது அப்போதைக்கு பிடிபடாது.  எனினும் முதல் முறையாக பார்த்த அந்த முகத்தை மீண்டும் மீண்டும் நமக்குள் கொண்டுவந்து,  சிலாகித்துக் கொண்டிருப்போம்.   முதன் முறையாக பார்த்த உடனே அந்த நபரை ஏன் பிடிக்க வேண்டும்? என  நமக்குள் பல ஆயிரம் முறை கேள்வி கேட்டுக் கொண்டாலும்,  பதில்  கிடைக்காது. ஆனால் பார்த்தவுடனே சிலரை பிடிப்பதற்கான முக்கிய காரணம்  உளவியல் என  ஆய்வுகள் கூறுகின்றன. இதையும் மீறி ஒரு சில காரணங்களும் உண்டு.  அது குறித்து விரிவாக பார்க்கலாம். 

மாறும் கருவிழிகள்

மனிதனுடைய கருவிழிகள் வட்ட வடிவம் கொண்டது. நமது ரசனைக்கு உட்பட்ட சில விஷயங்களை பார்க்கும்போது,  அந்த கருவிழியின் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றன. இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  நீங்கள்   முதன் முதலில் பார்க்கும் அந்த நபரின் முகம்,  உங்களுக்கு பிடித்து போகும் போது,  உங்களுடைய கருவிழியில் மாற்றம் ஏற்படும்.  அதே மாற்றம் நீங்கள் பார்க்கக் கூடிய நபரின் கண்களிலும் ஏற்பட்டால்,  ஏதோ அதிசயம் நடந்தது போன்ற உணர்வு   உருவாகும். 

வடிவான இடுப்பு

பொதுவாக இடுப்புப்பகுதி வடிவாக இருந்தால் மிகவும் பிடிக்கும்.  இது ஆணுக்கும் பெண்ணுக்கும்  என இருவருக்குமே பொருந்தும்.  இடுப்பு பகுதி, அரை வட்ட வடிவில் இரு பக்கங்களும் வளைந்து காணப்பட்டால்,  அந்த நபரை கண்டவுடன் பிடித்து போகும். பார்த்தவுடன் பிடிப்பது மட்டுமல்லாமல், அந்த நபர் மீது காதலும் வரலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  இந்தக் கருத்து ஆண் பெண் என இருவருக்குமே பொருந்தும்  என்பது குறிப்பிடத்தக்கது. 

கண்களுக்கு இடையில்

மூக்கின் நுனி மற்றும் மேல் உதட்டுக்கு இருக்கும் இடைவெளியை விட, முகத்தில் இருக்கும் இரண்டு கண்களுக்கான இடைவெளி அதிகமாக இருந்தால், அந்த  முகத்தை பார்த்த மாத்திரத்தில்  பசுமரத்தாணி போல பதிந்து விடும்.  அந்த குறிப்பிட்ட முகமுடைய நபரை,  பிடித்துள்ளதா பிடிக்கலையா என்கிற கேள்விகள் நமக்குள் தொடர்ந்து எழும்.  இதனால் அந்த முகம் காலத்துக்கும் மறக்காது போல மனதில் பதிந்துவிடும்.

Makhana : பாலுணர்வு முதல் இருதய நலன் வரை- தாமரை விதைகளில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!!

மாசற்ற முகம்

ஒருவேளை  பருக்கள் மற்றும் மருக்கள் அதிகமாக கொண்ட  முகத்தை கொண்டிருப்பவர்கள்  பெரிதும் இருக்கமாட்டார்கள்.  ஆனால் அதுவே எந்தவித
மாசற்று இருந்தாள்,  அந்த முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விடும்.  அதுவும் அந்த முகம் பளபளப்பாகும்,  புன்சிரிப்புடன் காணப்பட்டால் அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டு அகலாது.   ஒருவேளை குறிப்பிட்ட இந்த குணாதிசயங்கள்  பெண்களிடம் இருந்தால்,  ஆண்கள் பாடு திண்டாட்டம் தான்.

உங்களை மட்டுமே குறிவைத்து கொசு கடிப்பதாக தோன்றுகிறதா? அப்போ இதப்படிங்க...!!

அமைதி தரும் அதிசயம்

 இதுதொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிட்ட ஒரு கருத்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.  அமைதியாக  பேசுபவர்களை பலருக்கும் பார்த்தவுடனே பிடித்துவிடுகிறது  என்பது தான்.  ஒருபெரும் சபையில்  குறைவாக பேசுபவர்களின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.  அதே சமயத்தில் அதிக அளவில் பேசுபவர்களின் கருத்து,  நிராகரிக்கப்பட கூடியதாகவே உள்ளது. அதற்குக் காரணம் குறைவாக பேசுபவர்களின் பேச்சில் இருக்கும் நிதானமும் தெளிவும் தான். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios