உங்களை மட்டுமே குறிவைத்து கொசு கடிப்பதாக தோன்றுகிறதா? அப்போ இதப்படிங்க...!!
கொசுக்கள் ஆபத்தானவை. இதனால் பல நோய்கள் பரவி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. விநோதமாக, சிலருக்கு கொசுக்கள் அனைத்தும் தன்னை மட்டுமே தேர்வு செய்து கடிப்பதாக தோன்றும். தான் எங்கு சென்றாலும் கொசு வந்துவிடுவதாகவும் தோன்றும்.
ஒரு நான்கைந்து பேர் சேர்ந்து நிற்கும் இடத்தில், கூட்டமாக சுற்றும் கொசுக்கள் தன்னை மட்டுமே தேர்வு செய்து கடிப்பதாக சிலருக்கு தோன்றக்கூடும். சில நேரங்களில் அது உண்மையாகவும் இருக்கக்கூடும். இநத சம்பவம் பல நேரங்களில் ஏற்பட்ட அனுபவமாகக் கூட இருக்கும். அப்படிப்பட்ட நபர்கள் எங்கு சென்றாலும் கொசு தன்னை துரத்துகிறது, கொசுவுக்கு தன்னை மிகவும் பிடித்துள்ளது என்கிற எண்ணம் தொடர்ந்துகொண்டே இருக்கும். சிலரிடம் இருக்கும் இந்த எண்ணங்கள் குறித்து ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக ஆய்வு செய்துள்ளனர். பல ஆண்டுகளாக அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை கொசுக்கள் கடிக்க என்ன காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர். கொசு உங்களைக் தொடர்ந்து கடிப்பதாக இருந்தால், அதனுடைய சிறப்பு என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் கொசுவால் ஈர்க்கப்படுகிறீர்களா?
மனிதர்களைப் போலவே, கொசுக்களும் மனிதர்களால் ஈர்க்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் மனித உடலின் வாசனை. பசியுடன் இருக்கும் கொசுவுக்கு, உங்கள் உடல் ”கால்கள் உடைந்ததைப் போல” வாசனை வீசத் தொடங்கும். பின்னர் அது உங்களிடம் வரும். தப்பிக்க எவ்வளவு முயன்றாலும் அது உங்களை சும்மா விட்டாது.
தப்பிக்க முயற்சி செய்தாலும் வீண்
கொசு உடல் துர்நாற்றத்தால் ஈர்க்கப்பட்டால், அதை மறைக்க நீங்கள் வாசனை திரவியத்தை தேர்வு செய்யலாம். ஆனால் அதனால் எந்த பயனுமில்லை. கொசுக்கள் உடல் துர்நாற்றத்துடன் ஒரு சிறப்பு உறவைக் கொண்டுள்ளன. மூன்றாண்டு கால ஆய்வின்படி, டியோடரண்ட் அல்லது வாசனை திரவியம் போடுவது அல்லது ஷாம்பு மாற்றுவது கொசு ஈர்ப்பைத் தடுக்கலாம். ஆனால் அது சிறிது நேரத்துக்கு தான். நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் உடல் நாற்றம் மாறாது. உங்கள் வியர்வையின் வாசனையும், உணவு வாசனையும் மாறாது.
Cholesterol Control : கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் ஆபத்தான உணவுப் பழக்கங்கள்..!!
கொசுவுக்கு எப்போது உங்களை பிடிக்கிறது?
கொசு குறித்து நிறைய ஆய்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுள்ளன. சமீபத்திய அறிக்கையின்படி, பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போதும் அல்லது மக்கள் பீர் குடிக்கும் போது கொசுக்களால் ஈர்க்கப்படுகிறார்கள். அதேபோல குளிக்காமல் இருப்பவர்கள், அன்றைய நாளில் நேரம் தாழ்த்தி குளிப்பவர்கள் உள்ளிட்டோரையும் கொசு விடாமல் கடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் வயிற்றில் பச்சையாக ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள்- அப்புறம் அதிசியம் நடக்கும் பாருங்கள்..!!
கொசு ஈர்ப்புக்கு இதுவும் ஒரு காரணம்
நியூயார்க்கில் உள்ள ராக்ஃபெல்லர் பல்கலைக்கழக ஆய்வுகளின் படி, கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிக வாசனை உள்ளவர்களிடம் கொசுக்கள் ஈர்க்கப்படுகின்றன. கொசுக்கள் மற்ற மக்களை விட கார்பாக்சிலிக் அமிலத்தின் வாசனை உள்ளவர்களிடம் 100 மடங்கு அதிகமாக ஈர்க்கப்படுகின்றன. அவர்களை கடிக்கும் கொசுக்கள் பல பெண் கொசுக்களாகவே இருக்கும். இந்த கொசுக்களால் டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல், ஜிகா போன்ற நோய்கள் பரவுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.