Makhana : பாலுணர்வு முதல் இருதய நலன் வரை- தாமரை விதைகளில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!!
ஐம்புலனும் புத்துணர்ச்சி பெறும் விதத்தில் இதனுடைய க்ரீமி சுவை மனதை வசியம் செய்துவிடும். இதன்மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை குறித்து விரவாக தெரிந்துகொள்வோம்.
தாமரை விதைகள் இந்தியாவில் மக்கான் என்று அறியப்படுகின்றன. தாமரை இலைகளின் தண்டுகளில் இருந்து பெறப்படும் இவை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவாகவும் உட்கொள்ளப்படுகிறது. சப்ஜி முதல் நொறுக்குத் தீனி வரை தாமரை விதைகளை சமைத்து சாப்பிடலாம்.
வட மாநிலங்களில் மக்கான் என்று சொல்லப்படும் தாமரை விதைகளில் செய்யப்படும் நொறு வகைகள் மிகவும் பிரபலம். வட இந்தியப் பகுதிகளிலுள்ள ஒவ்வொரு வீடுகளிலும் மக்கான் உணவுகள் பிரசித்திப் பெற்றவையாகும். தாமரையின் தண்டில் இடம்பெற்றுள்ள இந்த விதைகளில் பல்வேறு சத்துகள் உள்ளன. இதை பச்சையாகவும் சாப்பிடலாம் என்றாலும். மொறுமொறுப்பான சிற்றுண்டியாக மாற்றி சாப்பிட்டால் நம்மால் விடவே முடியாது. ஐம்புலனும் புத்துணர்ச்சி பெறும் விதத்தில் இதனுடைய க்ரீமி சுவை மனதை வசியம் செய்துவிடும். இதன்மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை குறித்து விரவாக தெரிந்துகொள்வோம்.
என்றும் இளமை
தாமரை விதைகளில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. மேலும் இதில் ஆண்டிஆக்சிடண்டுகள் இருப்பதால், உடலுக்கு சுய சுத்திகரிப்பை வழங்குகிறது. உடலில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த காற்றை விரைவாக தாமரை விதைகள் வெளியேற்றிவிடும். இதன்மூலம் சீக்கரமே வயதான தோற்றத்துக்கு மாறும் நிலை தடுக்கப்படும். இதில் இயற்கையாக கேம்ப்ஃபெரால் நிறைந்துள்ளது. இதன்மூலம் முகம் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
மலச்சிக்கலுக்கு அருமருந்து
பல்வேறு முறையற்ற உணவுப் பழக்கங்களால், பலருக்கும் வயிறு தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதிலும் பெரியோர்கள் மற்றும் இளைஞர்களிடையே மலச்சிக்கல் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. அந்த சிக்கலை தடுப்பதற்கு தாமரை விதைகள் வழிவகை செய்கின்றன. தினமும் உங்களுடைய உணவில் மக்கான் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால், மலச்சிக்கலில் இருந்து உடனடியாக தீர்வு கிடைக்கும்.
எடையை குறைக்க உதவும்.
நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் மக்கானில் குறைந்தளவிலான கலொரிகளே உள்ளன. இதை சாப்பிட்டு வருவதால், உடல் பருமன் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். மேலும் இதில் குளூட்டன் மற்றும் கெட்டக் கொழுப்புக்கள் கிடையாது. எடையை குறைக்க எண்ணுபவர்களுக்கு நார்ச்சத்து பெரியளவில் உறுதுணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
போன் பயன்பாட்டை குறைக்க முடியாமல் தவித்து வருகிறீர்களா? அப்போ இதப்படிங்க முதல்ல..!
காதல் வாழ்க்கைக்கு வழிவகுக்கும்
ஆய்வுகளின் படி மக்கானில் பாலுணர்வை தூண்டும் அம்சங்கள் உள்ளன. நீங்கள் உங்கள் காதலி அல்லது காதலுடன் டேட்டிங் செய்துவிட்டு, தனிமையில் இருக்க விரும்பினால், உங்களுடைய உற்றவருக்கு மக்கானில் செய்த நொறுக்குத் தீனிகளை வழங்கலாம். இதன்மூலம் அந்த டேட்டிங் மகிழ்ச்சியான தருணங்களுடன் நிறைவடையும். தாமரை விதைகள் ஆண்களுக்கு பெரிதும் உதவுகிறது. விந்து முந்துதல் மற்றும் விறைப்புத்தன்மையில் பிரச்னை உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், மக்கானை தொடர்ந்து உணவுகளில் சேர்த்துக் கொள்ளவும்.
பிற்பகலில் குட்டித் தூக்கம் போட்டால், இவ்வளவு பயன்கள் கிடைக்கிறதா..??
இருதய நலனுக்கு நல்லது
தாமரை விதைகள் இருதயத்துக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. இதை சாப்பிடவுடன் உடலுக்குள் குளுகோசைட்ஸ் வெளியேறுகின்றன. இது உடலிலுள்ள கொலஸ்ட்ராலை எதிர்த்து போரிடுகிறது. மேலும் உடலில் படிந்துள்ள கெட்டக் கொழுப்புகளையும் இது ஓட ஓட விரட்டுகிறது. இதன்காரணமாக இருதயத்துக்கு ரத்த ஓட்டம் சீரடைகிறது. மேலும் இருதய நலன் கூடுகிறது.