கேரள உணவுகள் எப்போதும் தனியான சுவையுடன் ஆரோக்கியம் நிறைந்தவைகளாக தான் இருக்கும். அதிலும் கேரளாவிற்கே ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று புட்டு. குழாய் புட்டுடன், கொண்டைக்கடலை சேர்த்து செய்யும் கடலைக்கறி மிகவும் ஃபேமஸ். இது மிகவும் ஆரோக்கியமான காலை உணவாக கேரளாவில் பயன்படுத்தப்படுகிறது.
கேரளாவின் பாரம்பரிய உணவுகளில் புட்டும் கடலை கறியும் மிகச் சிறப்பான ஒன்று. வெறும் மூன்று முதல் நான்கு பொருட்களையே பயன்படுத்தியும், அருமையான காலை உணவை இந்த ரெசிபியுடன் நம்மால் தயாரிக்க முடியும். புட்டின் மென்மையும், கடலை கறியின் மசாலா மணமும் இணையும் போது, உணவின் சுவை பல மடங்கு அதிகரிக்கும். எளிமையான முறையில், வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே செய்து விடலாம். நெய் மணமும் தேங்காய் மணமும் நிறைந்த புட்டு, காரமான கடலை கறி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
கேரளா ஸ்பெஷல் புட்டு :
தேவையான பொருட்கள்:
புட்டு மாவு – 2 கப் (அரிசி மாவு அல்லது ராகி மாவு)
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1/2 கப் (தேவையான அளவுக்கு)
தேங்காய் துருவல் – 1/2 கப்
நெய் அல்லது எள் எண்ணெய் – சிறிதளவு
பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை (விரும்பினால்)
புட்டு செய்யும் முறை :
- ஒரு பெரிய பாத்திரத்தில் புட்டு மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, மாவை கைப்பிடி செய்தால் உருண்டையாகவும், பிடிக்காதால் பிய்த்துவிடும் அளவிற்கு இருக்குமாறு கிளற வேண்டும்.
- மாவு மிகவும் ஒட்டக்கூடாது. கைபட்டால் மென்மையாக சிதறும் பக்குவத்தில் இருக்க வேண்டியது அவசியம்.
- இதை 10-15 நிமிடம் மூடி வைத்தால், மாவு சிறிது ஊறி இருக்கும்.
- புட்டு குழல் (Puttu Maker) எடுத்துக்கொண்டு, கீழே சிறிது தேங்காய் துருவல் வைக்க வேண்டும்.
- அதன் சிறிது மேல் புட்டு மாவு, மீண்டும் தேங்காய் துருவல் சேர்த்து, ஒரு அடுக்கு அடுக்காக அடைக்கவும்.
- புட்டு குழல் முழுவதும் நிரம்பியவுடன், மேல் மூடியை மூடி விட வேண்டும்.
- புட்டு குழலை வேகவைக்க அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டும்.
- தண்ணீரில் நல்ல ஆவி வந்ததும், புட்டு குழலை மேலே பொருத்தி வேகவைக்க வேண்டும்.
- 8-10 நிமிடங்கள் கழித்து, புட்டில் இருந்து நறுமணம் வந்ததும், அது வெந்துவிட்டது என்று அர்த்தம். சூடாக பரிமாறலாம்!
கேரட்டை விடுங்க...இந்த 8 உணவுகளை சாப்பிட்டாலே கண் பார்வை தெளிவாகும்
கடலை கறி :
தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டை கடலை – 1 கப் (மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்)
தேங்காய் துருவல் – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை – சில இலைகள்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் (தேவைபட்டால் சேர்க்கலாம்) – 1/2 கப்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கடலை கறி செய்முறை :
- கருப்பு கொண்டைக் கடலையை நன்றாக கழுவி, 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு குக்கரில் கடலை, உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வரை வேக வைக்க வேண்டும்.
- வெந்த கடலையை தனியாக வைத்துக் கொள்ளவும்; தண்ணீரை ஊற்றிவிடக்கூடாது, இது கறிக்குத் தேவைப்படும்.
- ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காய்ச்சி, தேங்காய் துருவல், மிளகு, சோம்பு, கொத்தமல்லி விதை சேர்த்து வறுக்கவும்.
- மிதமான நீல நிறமாக மாறும்போது, இதை எடுத்துக் கொண்டு தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்க வேண்டும்.
- மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பழுப்பு நிறமாக மாறியதும், தக்காளி சேர்த்து நன்கு மசிந்துவரும் வரை வதக்கவும்.
- மிளகாய்த்தூள், தனியாத்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும்.
- அரைத்த மசாலா பேஸ்டை சேர்த்து, 5 நிமிடங்கள் கலந்தவுடன் வேகவைத்த கடலை மற்றும் அதன் கடலை நீரைக் கொஞ்சம் சேர்த்து குழைத்துக் கொதிக்க விடவும்.
- 10 நிமிடங்கள் கழித்து, கறி நன்கு இறுகலாகி வந்தால், தேங்காய் பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடலாம்.
- கடைசியாக, ஒரு சிறிய வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து, கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து கடலைக் குழம்பில் சேர்த்து சூடாக பரிமாறலாம்.
தினமும் 10,000 ஸ்டெப் எதற்காக நடக்கணும்?...இதனால் என்ன மாற்றம் வரும்?
சிறப்பு குறிப்புகள்:
- சற்றே பனங்கற்கண்டு சேர்த்து புட்டை செய்தால், இனிப்பும் காரமும் சேர்ந்து சுவை மேலும் அதிகரிக்கும்.
- தேங்காய் எண்ணெய் சில துளிகள் சேர்த்தால், உணவுக்கு இயற்கையான மணம் வரும்.
- நெய் விரும்புபவர்கள், ஒரு டீஸ்பூன் நெய்யுடன் புட்டை சூடாக பரிமாறலாம்.
