ரோட்டோ கடைகளில், அதுவும் கடலோரத்தில் இருக்கும் ரோட்டோர கடைகளில் கிடைக்கும் பிரபலமான உணவுகளில் ஒன்று மீன் பிரைடு ரைஸ். மசாலா தூக்கலாக தயாரிக்கப்படும் இந்த மீன் பிரைடு ரைசை வீட்டிலேயே செய்து அசத்தலாம். ரெசிபியை படித்து தெரிந்து கொண்டு, நீங்களும் ஒருமுறை டிரை பண்ணி பாருங்க.

மீனை குழம்பு வைத்து, வறுத்து தான் அதிகமாக சாப்பிட்டிருப்பீர்கள். சில மீன்களை தொக்காக கூட செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மீனில் பிரைடு ரைஸ் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? அதிலும் சுவையான மசாலாக்கள் சேர்த்து செய்தால் அதன் சுவை வேற லெவலில் இருக்கும். ஒருமுறை இதை சாப்பிட்ட பார்த்தால் அப்புறம் விடவே மாட்டிங்க. வீட்டிலேயே சுவையான மீன் பிரைடு ரைஸ் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொண்டு நீங்களும் டிரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள் :

மீன் மசாலா தயாரிக்க வேண்டிய பொருட்கள்:

மீன் (விருப்பமான மீன்) – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மைதா / அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன் (கிரிஸ்பியாக வறுக்க)
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

பிரைடு ரைஸிற்கான முக்கிய பொருட்கள்:

அரிசி – 1 1/2 கப் (பாஸ்மதி அல்லது சாதாரண அரிசி)
கேரட் – 1/4 கப் (நறுக்கியது)
முட்டைகோஸ் – 1/4 கப் (நறுக்கியது)
கேப்ஸிகம் – 1/4 கப் (நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 5 பற்கள் (நறுக்கியது)
முட்டை – 2
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
பிளாக் பெப்பர் (கருமிளகு தூள்) – 1 டீஸ்பூன்
அஜினோமோட்டோ தேவைப்பட்டால் – சிறிதளவு
எண்ணெய் / வெண்ணெய் – தேவையான அளவு

சம்மர் வந்தாச்சு...மக்களே இந்த பழம் கிடைத்தால் விட்டுடாதீங்க

செய்முறை : 

மீன் பொரிக்கும் முறை :

- முதலில், சுத்தமாக கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- அதில் மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசைந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- சிறிதளவு மைதா அல்லது அரிசி மாவு சேர்த்து மீனை லேசாக ஒரு முறை கலக்கவும்.
- கடாயில் எண்ணெய் சூடாக்கி, மீனை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- கிரிஸ்பியாக இருக்க, மீனை மிதமான சூட்டில் பொரிக்கவும்.

அரிசி வேகவைக்கும் முறை :

- பாஸ்மதி அரிசியை 30 நிமிடங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும்.
- பின்பு, ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு உப்பு, ஒரு சொட்டு எண்ணெய் சேர்த்து அரிசியை 80% மட்டுமே வேகவைக்க வேண்டும்.
- வெந்ததும், வடிகட்டி ஆற விடவும்.

பிரைட் ரைஸ் தயார் செய்யும் முறை : 

- ஒரு பெரிய வாணலியில் சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நறுக்கிய காய்கறிகள் (கேரட், முட்டைகோஸ், கேப்ஸிகம்) சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- இடையில் முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறி விடவும்.
- வெந்த அரிசியை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- சோயா சாஸ், கருமிளகு தூள், அஜீனோமோட்டோ (விருப்பமுள்ளது என்றால்), உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- இறுதியாக, பொரித்த மீன் துண்டுகளைச் சேர்த்து, மிதமான சூட்டில் 3-4 நிமிடங்கள் வதக்கி, இறக்கவும்.
- மசாலா மிகுந்த மீன் பிரைட் ரைஸ் தயார். இதனை சூடான சில்லி சாஸ், மஞ்சள் பச்சடிகள் அல்லது மயோனெய்ஸ் உடன் பரிமாறலாம். இதன் சுவை ஒருமுறை சாப்பிட்டால் மறக்க முடியாதது!

சொக்க வைக்கும் கண் அழகுக்கு செம டிரெண்டான 5 கண் மேக்கப்கள்

சுவையை அதிகரிக்க குறிப்புகள்:

- அரிசியை 80% மட்டுமே வேகவைக்க வேண்டும், இல்லை என்றால் குழைந்து விடும்.
- சோயா சாஸை அதிகமாக சேர்க்க வேண்டாம், இல்லையெனில் உணவு கருப்பாகிவிடும்.
- கடல் உணவின் சுவையை பாதுகாக்க, நன்கு வறுத்து மீனை சேர்க்க வேண்டும்.
- பாஸ்மதி அரிசியை பயன்படுத்தினால், பிரைட் ரைஸ் மிக உதிரியாக இருக்கும்.
- சிறிதளவு வெண்ணெய் சேர்த்தால், உணவின் சுவை பல மடங்கு அதிகரிக்கும்.