Asianet News TamilAsianet News Tamil

நவராத்திரி ஸ்பெஷல் ரெசிபி: சுவையான அரிசி பாயாசம் செய்வது எப்படி?

நவராத்திரியும் வந்தாச்சு, அம்மனுக்கு மட்டுமின்றி வீட்டில் இருப்பவர்களுக்கும் வகை வகையாக பலகாரங்களை செய்து கொடுத்து அசத்தலாமே. என்னதான் கடையில் வாங்கினாலும், வீட்டில் சுத்தமான எண்ணெய்யில் செய்து சாப்பிடும் சுவையே தனிதான். அம்மாவின் அன்பும், கை பக்குவமும் கூடுதல் சுவையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Navratri recipes in Tamil: How to make Arisi payasam
Author
First Published Oct 14, 2023, 5:46 PM IST

ஒரே சுண்டல் மட்டுமே செய்து அம்மனுக்கு படைக்காமல், இனிப்பு வகைகளும் செய்து அசத்தலாம். வாங்க எளிதான அரிசி பாயாசம் எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். சாமை, தினை அல்லது பச்சரிசி என்று எதில் வேண்டுமானாலும் செய்யலாம். சுவையில் குறை இருக்காது.

தேவையான பொருட்கள்:
5 கப் கிரீம் பால் 
3 கப் அரிசி 
12  முந்திரி 
20-25 காய்ந்த திராட்சை 
5 ஏலக்காய் (பொடி செய்யவும்) 
1/2 கப் சர்க்கரை (வேண்டுமானால் சிறிது கூடுதலாக சேர்க்கலாம். ஆனால், தேவைப்படாது)

Food Recipe in Tamil:கொங்கு நாட்டு அரிசி, பருப்பு சாதம்; ஒரு முறையாவது சமைச்சு சாப்பிட்டுத்தான் பாருங்கேளேன்!!

தயாரிக்கும் முறை:
அரிசியை நன்றாக சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைக்கவும் 
அடிகனமான பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்கவும் 
பால் நன்றாக கொதி வந்தவுடன் அரிசி சேர்த்து நன்றாக கலக்கவும்
ஒவ்வொரு 2 அல்லது 3 நிமிடங்களுக்கு ஒரு முறை கலந்து விடவும். இல்லையென்றால் கட்டி கட்டிக் கொள்ளும் 
அரிசி நன்றாக வெந்த பின்னர், நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும். மீண்டும் பாயாசம் கெட்டியாக வரும் வரை கலந்து கொண்டே இருக்கவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும். தற்போது தயாரான அரிசி பாயாசத்தை வீட்டில் இருப்பவர்களுக்கு சுடச் சுடச் கொடுக்கவும்.

என்ன பன்னீர் தொடர்ந்து சாப்பிட்டால் வயதாகுமா? உண்மையை தெரிஞ்சிகலாம் வாங்க..!!

Follow Us:
Download App:
  • android
  • ios