Food Recipe in Tamil:கொங்கு நாட்டு அரிசி, பருப்பு சாதம்; ஒரு முறையாவது சமைச்சு சாப்பிட்டுத்தான் பாருங்கேளேன்!!
கொங்கு நாட்டுப் பகுதிகளில் அரிசி, பருப்பு சாதம் சாப்பிடாதவர்கள் இருக்கமாட்டார்கள். விரைவில், எளிமையாக, வீட்டில் இருக்கும் குறைந்தபட்ச பொருட்களைக் கொண்டு செய்துவிடலாம். தொட்டுக் கொள்வதற்கு ஊறுகாய், தயிர், சிப்ஸ் இருந்தால் போதும். நிமிட நேரத்தில் ருசிக்க ருசிக்க சமைத்துவிடலாம். சத்தானதும் கூட.
அரிசி பருப்பு சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
ஒரு கப் அரிசி
1/4 அல்லது 1/2 கப் துவரம் பருப்பு
எண்ணெய் அல்லது நெய் எடுத்துக் கொள்ளலாம். அல்லது இரண்டையும் சிறிது சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
1/4 தேக்கரண்டி சீரகம்
1/4 தேக்கரண்டி கடுகு
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி சாம்பார் பொடி
2 காய்ந்த மிளகாய்
2 வெங்காயம் (சிறிய வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது)
6 பூண்டு
2 தக்காளி ஒன்று பொடியாக நறுக்கியது
தண்ணீர் - ஒரு கப் அரிசி என்றால் ஒன்னே முக்கால் கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்
உப்பு தேவையான அளவு
Prawn Curry: கம கம இறால் கறி செய்வது எப்படி? சிம்பிள்தான் செஞ்சுதான் பாருங்களேன்!!
செய்முறை:
* அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
* அடுப்பில் குக்கர் வைத்து, எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கடுகு சேர்த்து வெடித்த பின்னர், சீரகம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், பின்னர் வெங்காயம் சேர்க்க வேண்டும். இவை வதங்கிய பின்னர் தக்காளி, பூண்டு, உப்பு, மஞ்சள், சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும். பெருங்காயத்தூள் சிறிது சேர்க்கலாம்.
அடடா... ருசியோ ருசி... இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க மட்டன் கறி!!
இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதி வந்தவுடன் ஊறவைத்து இருக்கும் அரிசி, பருப்பு ஆகியவற்றை போடவும். குக்கர் வெயிட் போடவும். இரண்டு விசில் வந்தவுடன், இரண்டு நிமிடங்கள் ஸ்டவ் சிம் செய்து ஆப் செய்து விடவும். சுடச் சுட ருசியான அரிசி பருப்பு சாதம் ரெடி. இத்துடன் சிப்ஸ், ஊறுகாய், தயிர் வைத்து சாப்பிட அமிர்தமாக இருக்கும். வேண்டுமென்றால் கொத்தமல்லி இலை சேர்க்கலாம். உங்களது விருப்பம்.