அப்பளத்தை சுட்டு சாப்பிடுறீங்களா? பேராபத்து வரும்.. ஜாக்கிரதை! காரணம் இதோ...

ருசியாக இருப்பதால் அப்பளத்தை அதிகமாக சாப்பிட்டால், இந்த உடல்நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

know reasons why you should not eat too much papad in tamil mks

இந்திய உணவில் பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் அப்பளம் ஒன்று. எந்த ஒரு சைவ உணவுகளிலும் அப்பளம் இல்லாமல் முழுமையடையாது.. அப்பளத்தை  உணவோடு சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவை வித்தியாசமாக இருக்கும். ஆனால் இப்படி பொரித்த அப்பளத்தை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய கேடு தான் ஏற்படும். ஆம்,. எண்ணெயில் பொரித்த உணவைத் தொடர்ந்து உட்கொள்வது சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவது இயல்பானது. அந்தவகையில், அப்பளம் சாப்பிடுவதால் எந்தெந்த நோய்கள் வரும் என்பது பற்றிய ஆச்சரியமான தகவல் இதோ...

உப்பு அதிகமாக இருக்கும்: 
பொதுவாக, அப்பளத்தில் உப்புச் சத்து அதிகம் இருக்கும். இதை உண்ணும்போது,   உடலில் சோடியம் சத்து அதிகமாகும். இதனால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் ஆபத்துக்கள், சிறுநீரகப் பிரச்சனை, உடலில் நீர் கோர்த்து, வீக்கம் ஆகியவை ஏற்படும். அதுமட்டுமின்றி, இது எலும்புகளின் வலிமையை குறைத்து உடலை பலவீனப்படுத்துகிறது. எனவே, இதனை தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

எண்ணெய் பொருள்:
அப்பளம் பொரிக்க எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அப்பளம் எண்ணெயை உறிஞ்சும். இதனை உட்கொள்ளும் போது உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். அதுமட்டுமின்றி, மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெயில் அப்பளத்தை பொரிப்பது ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்துவது உறுதி. உடலில் எண்ணெய் அதிகமாக இருந்தால் தொண்டையில் தொற்று, உடல் பருமன், சர்க்கரை நோய், இதயம் போன்றவை ஏற்படும். 

இதையும் படிங்க:  அன்று ரூ.80 இன்று ரூ.1,600 கோடி: 45 ஆயிரம் பெண்களால் நடத்தப்படும் அப்பள நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை

அசிட்டிக் பிரச்சனை:
முன்பெல்லாம் அப்பளத்தில் உப்பு மட்டும் தான் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது பலவிதமான ஃப்ளேவர்களில் அப்பளங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் பச்சை மிளகாய் இன்னும் நிறைய மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. இவை சுவைக்கு அருமையாக இருக்கலாம். ஆனால் அவைஅதிகமான வாயு உற்பத்தி செய்கிறது மற்றும் அசிட்டியை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க:   ஏசியன் நாச்சோஸ் வெறும் ரூ.500 தான்.. நம்ம ஊரு அப்பளத்தை காப்பி அடித்த மலேசிய ஹோட்டல்! கலாய்க்கும் நெட்டிசன்கள்

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்:
அப்பளம் எண்ணெயை அதிகம் குடிக்கும் தன்மை உடையது. அப்பளத்தை சுட்டு சாப்பிடுவதை விட பொறுத்து சாப்பிட்டால் அதன் சுவை அருமையாக இருக்கும். மேலும் அப்பளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சுகாதாரம் குறைவு:
நாம் அப்பளத்தை கடைகளில் வாங்கும் போது அவற்றின் பாக்கெட் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அவை தயாரிக்கும் இடம் சுத்தமாக் இருக்குமா என்று நமக்கு தெரியாது. ஏனெனில் அப்பளம் தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர், மாவு பிசைவது, அப்பளத்தை பேக் செய்வது போன்றவற்றில் சுகாதாரம் இருக்குமா என்று நமக்கு தெரியாது. அதனால்தான் அப்பளம் ஒரு சுகாதார உணவு என்று சொல்ல முடியாது.

புற்றுநோய் வரும்:
பலர் அப்பளத்தை நிறைய சாப்பிடால் அவை கொலஸ்ட்ரால் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், எண்ணெயையும் அதிகம் குடிக்கும். அதனால் அவர்கள் அப்பளத்தை சுட்டு சாப்பிடுவார்கள். ஆனால் பொரித்த அப்பளத்தை விட சுட்ட அப்பளத்தில் தான் ஆபத்து அதிகம் இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. ஏனெனில் அப்பளத்தை நெருப்பிலோ அல்லது மைக்ரோ ஓவனிலோ சுட்டு சாப்பிடும் போது அவற்றிலிருந்து அக்ரிலாமைடு, கார்சினோசின், சோடியம் பென்சாயிடு ஆகியவை உண்டாகும். இவை புற்றுநோய் உண்டாவதற்கு முக்கிய காரணம் ஆகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios