ஏசியன் நாச்சோஸ் வெறும் ரூ.500 தான்.. நம்ம ஊரு அப்பளத்தை காப்பி அடித்த மலேசிய ஹோட்டல்! கலாய்க்கும் நெட்டிசன்கள்
இந்தியர்கள் வீட்டில் ஒவ்வொரு உணவோடும் சேர்த்து பாப்பட் என்று அழைக்கப்படும் அப்பளத்தை சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.
தமிழர்களின் மதியச் சாப்பாட்டில் இடம் பெறும் ருசியான ஒரு அயிட்டம். அப்பளம். சாம்பார், ரசம், வத்தக் குழம்பு எனப் பல இருந்தாலும் அப்பளம் அடிசனலாக இருந்தால் அதன் சுவையே தனி.
திருமண விருந்தில் சிலர் பாயாசத்துடன் அப்பளத்தை நொறுக்கிப்போட்டு சாப்பிடுவார்கள். சின்னக் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவது அப்பளம். இந்தியர்கள் வீட்டில் ஒவ்வொரு உணவிற்கும் சேர்த்து பாப்பட் என்று அழைக்கப்படும் அப்பளத்தை சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.
இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?
இப்படிப்பட்ட நம் உணவான அப்பளத்தை மலேசியாவில் உள்ள ஒரு உணவகம் ஒன்று, ஏசியன் நாச்சோஸ் என்ற பெயரில் விற்றுவருகிறது. இதுதான் தற்போது ட்ரெண்டிங் டாபிக்காக மாறியிருக்கிறது.ட்விட்டரில், சமந்தா என்பவர் மலேசியா ஹோட்டல் மெனுவை ஷேர் செய்து, இங்கு சமையல் குற்றம் நடந்துள்ளது என்று எழுதியுள்ளார்.
இந்த உணவில் அப்பளம், வெண்ணெய், புளி சல்சா மற்றும் மிருதுவான வெங்காயம் ஆகியவை அடங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவு இதுவரை ட்விட்டரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 9 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.
இதையும் படிங்க..ஜனவரி 27 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்ட மற்றொருவர், இந்த உணவகம் மலேசியாவில் அமைந்துள்ளது. இதன் விலை 25 மலேசிய ரிங்கிட்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.500 ஆகும். இதன் விலைப்பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியர்கள் இதனை கலாய்த்து தள்ளி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..அதிமுக ஒன்றுபட வேண்டும்.. பிரதமர் மோடி விருப்பம்! ஆனால் இரட்டை இலை மட்டும்.? ஓபிஎஸ் காட்டிய அதிரடி