அன்று ரூ.80 இன்று ரூ.1,600 கோடி: 45 ஆயிரம் பெண்களால் நடத்தப்படும் அப்பள நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை
80 ரூபாயில் 4 பெண்களால் தொடங்கப்பட்ட ஒரு அப்பள நிறுவனம், இன்று ரூ.1600 கோடி மதிப்பில் 45 ஆயிரம் பெண்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
80 ரூபாயில் 4 பெண்களால் தொடங்கப்பட்ட ஒரு அப்பள நிறுவனம், இன்று ரூ.1600 கோடி மதிப்பில் 45 ஆயிரம் பெண்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் சில குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும்தான் ஆண் ஊழியர்கள் பணியில்இருக்கிறார்கள், மற்றவர்கள் அனைவருமே பெண்கள் மட்டும்தான்.
லிஜ்ஜத் அப்பளம்(Lijjat Papad) எனும் வார்த்தை நாடுமுழுவதும் புகழ்பெற்றது. வாழ்வில் ஒருமுறையாவது இந்த லஜ்ஜத் பப்படை யாராவதுஒருவர் சுவைத்திருப்பார்கள். இந்த சுவை மிகுந்த அப்பளங்களை தயாரிக்கும் லஜ்ஜத் நிறுவனம் கடினமான பாதைகளைக் கடந்து வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 1959ம் ஆண்டு மும்பையில் உள்ள கிர்கவும் பகுதியில் 7 பெண்கள் சேர்ந்து ரூ.80 முதலீட்டில் அப்பள கம்பெனியைத் தொடங்கினர். இந்த 80 ரூபாயில் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கினர்.
ஜஸ்வந்திபென் ஜாம்னாதாஸ் போபத், பார்வதிபென் ராமதாஸ் தோடானி, உஜெம்பென் நரன்தாஸ் குன்டாலியா, பானுபென் என் டன்னா, லகுபென் அமிர்தலால் கோகனி, ஜெயாபென் வி விதாலனி, தில்வாலிபென் லுகா ஆகிய பெண்கள் சேர்ந்துதான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். சமூக சேவகர் சாக்னாலால் கரம்சி பரேக் என்பவரிடம் இருந்து 80 ரூபாய் பெற்று அப்பளத்துக்கான மூலப்பொருட்களை வாங்கினர்.
அப்பளம் தயார் செய்த முதல்நாளஇல் 4 பாக்கெட்டுகள் மட்டும்தான்விற்பனையாகின, முதல் ஆண்டில் 6ஆயிரம் பாக்கெட்டுகள் விற்றன. இதையடுத்து, 1962-ம் ஆண்டு தங்கள் அப்பளத்தை லிஜ்ஜத் என்ற பெயரிட்டு விற்பனை செய்யத் தொடங்கி, அதற்கு பரிசூக்கூப்பனை அறிமுகம் செய்தனர். அந்த நேரத்தில் லிஜ்ஜத் அப்பளம் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.
மெல்ல மெல்ல வளர்ந்த லிஜ்ஜத் நிறுவனத்தில்படிப்படாக பெண்கள் சேர்ந்து பணியாற்றத் தொடங்கி, அவர்களும் சக உரிமையாளர்களாக மாறினர். இந்த லிஜ்ஜத்அப்பளத்தைப் பற்றி அறிந்த ஊடகங்கள் வெளிச்சம்பாய்ச்சவே வேகமாக நிறுவனம் வளரத் தொடங்கியது.
கடந்த 60 ஆண்டுகளில் லிஜ்ஜத் அப்பள நிறுவனம் 2002ம் ஆண்டில் 42 ஆயிரம் பெண்கள் வேலைபார்க்கும் நிறுவனமாகவும், 2021ம் ஆண்டில் 45 ஆயிரம் பெண்கள் வேலைபார்க்கும் நிறுவனமாகவும் மாறியது.
தற்போது லிஜ்ஜத் நிறுவனத்துக்கு நாடுமுழுவதும் 82 கிளைகள் உள்ளன, அமெரிக்கா, சிங்கப்பூருக்கு அப்பளங்களை லிஜ்ஜத் நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. அப்பளம் மட்டுமல்லாமல் சலவை சோப், ரொட்டி தயார் செய்தும் விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஆண்டு லிஜ்ஜத் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஜஸ்வந்திபென் ஜாம்னாதாஸ் போபத்(வயது90) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்றார்.
வெறும் 80 ரூபாயைக் கொண்டு, 7 பெண்களால் தொடங்கப்பட்ட நிறுவனம், 60ஆண்டுகளில் ரூ.1600 கோடி முதலீடு மிக்க நிறுவனமாகவளர்ந்துள்ளது. ஏறக்குறைய 45ஆயிரம் பெண்கள் பணியாற்றுகிறார்கள், நாள்தோறும் 48 லட்சம் அப்பளங்கள் தயார் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன
இந்த நிறுவனத்தில் உள்ள பெண்கள் தாங்கள் தயாரிக்கும் அப்பளங்கள் மூலம் தங்கள் கணவரின் வருமானத்தைவிட அதிகமாக சம்பாதிக்கிறார்கள் மரியாதையுடன் வாழ்கிறார்கள்.