எளிமையாக வீடுகளில் உப்புமா செய்வார்கள். இது சிலருக்கும் ஃபேவரைட் உணவு என்றாலும், பலருக்கும் பிடிக்காதது. ஆனால் கர்நாடகா ஸ்டைலில் காரா பாத்தாக மசாலா தூக்கலாக சேர்த்து செய்து கொடுத்து பாருங்க, வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

கர்நாடகாவில் பிரபலமான மற்றும் அதிகம் விரும்பப்படும் ஒரு காலை உணவு வகை காரா பாத்து (Khara Bath)ஆகும். இது உடுப்பி உணவகங்களில் பரிமாறப்படும் ரவா உப்புமா வகை ஆகும். இது தமிழக உப்புமாவைப் போல தான், ஆனால் தனித்துவமான மசாலா சேர்க்கை மற்றும் மணமாக வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து தனி சுவையில் மாற்றி தருவார்கள். இதை நம்ம வீட்டிலேயே, கர்நாடகா ஸ்டைலில் செய்வது அசத்தலாம். 

தேவையான பொருட்கள் :

ரவை – 1 கப்
நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
இஞ்சி – 1/2 இன்ச் துண்டு (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
கேப்ஸிகம் – 1/4 கப் (விரும்பினால்)
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 1/2 கப்

நுரையீரலில் தேங்கி இருக்கும் அதிகமான சளியை நீக்க சூப்பரான வழிகள்

சுவைக்காக சேர்க்க வேண்டிய பொடி:

சாம்பார் தூள் / காரா பாத்து மசாலா – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
தூள் செய்த ஏலக்காய், கிராம்பு, பட்டை – 1/4 டீஸ்பூன் (விருப்பம்)

செய்முறை :

- ஒரு பெரிய வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி ரவை சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை குறிப்பாக 3-4 நிமிடங்கள் வறுக்க வேண்டும்.
- ரவா மணமாக வறிந்ததும், தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
- அதே வாணலியில் மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
- பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- இதற்குப் பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேப்ஸிகம் சேர்த்து லேசாக வதக்கவும்.
- சாம்பார் தூள், மிளகுத்தூள், உப்பு, தூள் செய்த மசாலாக்கள் சேர்த்து நன்றாக கலந்து அருமையான மணம் வரும் வரை வதக்கவும்.
- தயார் செய்யப்பட்ட ரவை சேர்த்து, மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
- இதற்குப் பிறகு, 2.5 கப் தண்ணீர் ஊற்றி தொடர்ந்து கிளற வேண்டும், இல்லை என்றால் கட்டிபட்டு விடும்
- எலுமிச்சைச் சாறு சேர்த்து சூப்பரான சுவை பெறலாம்.
- பக்குவமாகும் வரை மிதமான தீயில் 3-4 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
- இறுதியாக கொத்தமல்லி தூவி, மேலே சிறிதளவு நெய் சேர்த்து இறக்கவும்.
- சூடாக இருக்கும்போதே பரிமாறவும், இதன் மென்மையான மற்றும் மசாலா நிறைந்த சுவையை அப்படியே அனுபவிக்கலாம்.
- இதை கடலை சட்னி, வெங்காய சாம்பார், கொத்தமல்லி சட்னி போன்றவற்றுடன் பரிமாறினால், இன்னும் சுவையாக இருக்கும்.
- சாதாரண உப்புமாவைப் போல இல்லாமல், இதில் சுவைகள் அதிகம் இருப்பதால், இதை சீரக சம்பா அல்லது பாஸ்மதி அரிசி ரவாவிலும் செய்யலாம்.

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கணுமா? பெற்றோர்களுக்கான 5 சூப்பர் டிப்ஸ்!!

சுவை கூட்டுவதற்கான குறிப்புகள் :

- ரவா நன்றாக வறுத்தால் மட்டுமே இது உதிரி உதிரியாக இருக்கும், இல்லையெனில் ஒட்டும்.
- நெய் சேர்ப்பது கட்டாயம். இது உணவுக்கு அசல் கர்நாடகா உணவகத்தின் சுவையை தரும்.
- எலுமிச்சைச் சாறு சேர்ப்பது, உணவுக்கு சிறப்பான சுவை தரும்.
- சாம்பார் தூள் சேர்ப்பது, உணவுக்கு ருசியையும் மணத்தையும் அதிகரிக்கும்.