Asianet News TamilAsianet News Tamil

ஆஹா...சுடச் சுட ருசியான காஞ்சிபுரம் இட்லி ரெடி, நிமிடத்தில் செய்து அசத்தலாம்!!

காஞ்சிபுரம் இட்லியை கோவில் இட்லி என்று கூறுவது உண்டு. சாதாரண இட்லியில் இருந்து இந்த இட்லி முழுவதிலும் வேறுபடுகிறது. சீரகம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை போட்டு இந்த இட்லி கம கமக்க செய்யலாம்.

Kanchipuram idly recipe in Tamil
Author
First Published Sep 12, 2023, 5:47 PM IST

தினமும் சாதாரண இட்லியை சட்னி வைத்து தான் சாப்பிட்டு வருகிறோம். கொஞ்சம் வித்தியாசமாக காஞ்சிபுரம் இட்லி செய்து சாப்பிடலாம் வாங்க. எப்படி செய்வது, தேவையான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

ஆரோக்கியம் நிறைந்த சூப்பரான "சுவரொட்டி வருவல்" ரெசிபி இதோ..!!

தேவையான பொருட்கள்:
ஒரு கிண்ணம் நிறைய இட்லி மாவு எடுத்துக் கொள்ளவும். (அரிசி மாவை நைசாக அரைக்கக் கூடாது)
தேவையான அளவு உப்பு 
நன்றாக வெட்டிய ஒரு கொத்து கறிவேப்பிலை 
அரை டீஸ்பூன் பெருங்காயம் 
அரை டீஸ்பூன் சுக்கு பொடி 
ஒரு டீஸ்பூன் சீரகம் 
அரை டீஸ்பூன் மிளகு 
மூன்று பச்சை மிளகாய் 
ஒரு டேபிள் ஸ்பூன் ஊற வைத்த கடலை பருப்பு 

ஆட்டுக்கறி சாப்பிடுறீங்களா? அப்ப மறக்காம மண்ணீரல் அல்லது  சுவரொட்டி சாப்பிடுங்க.. அவ்ளோ நன்மை இருக்கு இதுல..!!
எவ்வாறு செய்ய வேண்டும்:
* கடாயில் எண்ணெய் சூடு செய்யவும். இத்துடன் அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்க்கவும் 
* கருகாமல் நன்றாக வதக்கிய பின்னர் இவற்றை மாவில் கலக்கவும் 
* உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் 
* இரவு முழுவதும் மாவை புளிக்க வைக்கவும் 
* மறுநாள் காலை இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றவும். சுடச் சுட சுவையான காஞ்சிபுரம் இட்லியை சட்னி வைத்து பறிமாறவும், ருசிக்கவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios